150 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு: இன்று வெற்றி பெற்றால் அடுத்த சுற்று!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 43வது போட்டி பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் அதன் பின்னர் விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் உள்பட அனைவரும் சொதப்பியதை அடுத்த 20 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது

RCB9இந்த நிலையில் 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். சற்று முன் வரை 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் எடுத்து கிட்டத்தட்ட அடுத்த சுற்றை உறுதி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...