ரஞ்சிதமே! ரஞ்சிதமே! என விஜய் பாடிய வாரிசு படத்தின் பாடல் புரோமோ இதோ

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது,

தமன் இசையமைக்கும் படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது. படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

விஷ்னு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் காதல் குஸ்தி அப்டேட்!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் அனைத்து மொழி இசை உரிமையையும் டி சீரிஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.தற்போழுது வாரிசு படத்தின் அப்டேட்டிற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

 

 

Published by
Velmurugan

Recent Posts