எஸ்.பி.பி-க்கு ‘பாடும்நிலா‘ பட்டம் கொடுத்த பாடல்.. ஒரே ஒரு எழுத்தால் சூப்பர் ஹிட் ஆன சுவாரஸ்யம்!

1985-ல் மோகன், ரேவதி, கவுண்டமணி நடிப்பில் வெளியான படம்தான் உதயகீதம். எஸ்.பி.பி-க்கு காலத்தால் அழியாப் புகழைக் கொடுத்த சங்கீத மேகம், பாடு நிலாவே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டு வெள்ளி விழா கொண்டாடிய படம். இந்தப் படத்தில் கவுண்டமணியின் எவர்கிரீன் காமெடியான உண்டியல் வைத்து வசூலிக்கும் போலிச் சாமியாராக நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரங்கராஜ் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடு நிலாவே பாடலை எழுதியவர் கவிஞர் மு. மேத்தா. எஸ்.பி.பி., ஜானகி ஆகியோர் இப்பாடலைப் பாடியிருப்பர். எஸ்.பி.பிக்கு பாடும் நிலா பட்டம் கொடுத்த இப்பாடல் உருவான தருணத்தை மு. மேத்தா குறிப்பிடும் போது, “

இசைக்கு இசைந்து வருகிற பாடல்களைத்தான் இளையராஜா இசையமைப்பார். அப்படியானால், மெட்டுக்கு அமைத்த பாடல்கள்தான் அதிகம். நானும் அவரது மெட்டுகளுக்கான பாடல்களையே எழுதியிருக்கிறேன். கணிசமான பாடல்களே வரிகளுக்கு இசையமைத்தவையாய் இருக்கும். இளையராஜா ஒரு படத்துக்கு ஆறு டியூன் போட்டால், அதை எந்தப் பாடலாசிரியர் எழுதணும்னு உதவியாளரிடம் சொல்வார். அந்த உதவியாளர் அந்தந்த பாடலாசிரியர்கள்கிட்ட டியூனைக் கொடுப்பார்.

சம்பந்தப்பட்ட இயக்குநரோட உட்கார்ந்து பேசி, எழுதிக் கொடுத்துடுவோம். இளையராஜா அண்ணே ரெக்கார்டிங்குக்குக் காலையில எந்தப் பாடலை யார் பாடணும்னு கூப்பிட்டுச் சொல்லிடுவார். ரெக்கார்டிங் அன்னைக்குக் காலையில பாடலாசிரியருடன் உட்கார்ந்து வரிகளைத் தேர்ந்தெடுப்பார். அவருடைய பெரும்பாலான பாடல்கள் மெட்டுக்கு எழுதிய பாடல்களாகத்தான் இருக்கும்.

கிளைமேக்ஸ் பாடலை டைட்டில் கார்டில் போட்ட இயக்குநர்.. கண்டபடி திட்டிய இளையராஜா.. ஆனாலும் ஹிட்தான்!

`உதயகீதம்’ படத்தில் `பாடு நிலாவே’ பாடலில் பாடகனான கதாநாயகன் சிறைச்சாலையில் இருப்பான். அவள் நாயகனை நினைத்து, நிலாவைப் பார்த்து `பாடு நிலாவே’ எனப் பாடுவாள். அதுக்குப் பதில் சொல்லும் விதமாக, கதாநாயகனும் `பாடு நிலாவே’ என ஆரம்பித்துப் பாடுவான்.

ரெக்கார்டிங் போயிட்டு இருக்கு. `அந்த ஹீரோ சிறைக்குள்ளே இருக்கான். அவன் ஏன் நிலாவைப் பார்த்துப் பாடணும்? அதுல ஒரு `ம்’ சேர்த்துக்கலாமா?’ என்றார். கதாநாயகன், `பாடும் நிலாவே’னு கதாநாயகியைக் குறிப்பிடுற மாதிரி வந்தபோது, அவ்வளவு நல்லா இருந்தது. நான் உடனே, `அண்ணே நீங்க சேர்த்த `ம்’ பாட்டை ஜம்முனு ஆக்கிடுச்சு’னு சொன்னேன். இந்தப் `பாடும் நிலா’தான், பின்னாளில் இந்தப் பாட்டை பாடிய எஸ்.பி.பி-க்குப் பட்டமாய் வழங்கப்பட்டது. இன்றும் அவர் `பாடும் நிலா’ பாலுதான்.’’ என்று பேட்டி ஒன்றில் மேத்தா கூறிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...