போடா டேய்.. கமலுடன் சண்டை.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே கடுப்பில் கிளம்பிய ஒய். ஜி. மகேந்திரன்..

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். முன்பெல்லாம் எக்ஸ்பெரிமெண்டல் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நிலையில், சமீப காலமாக அவரது ரூட்டே வேற மாதிரி என்று தான் சொல்ல வேண்டும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த விக்ரம் திரைப்படம், மிகப்பெரிய பிளாக்பாஸ்டர் ஹிட்டாக மாறி இருந்தது.

இந்த படத்திற்கு பிறகு, இந்தியன் 2, Thug Life, கல்கி, அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து மிகவும் பிஸியான நடிகராகவும் மாறி உள்ளார். இதில் இந்தியன் 2 திரைப்படம் அடுத்து ரிலீசிற்கு தயாராகி வருவதாகவும் தெரிகிறது. இன்னொரு பக்கம், அடுத்தடுத்து கமலின் திரைப்படங்கள் குறித்து அறிவிப்பு வந்து கொண்டிருந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து அது டிராப் ஆனதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், அந்த படம் சற்று தாமதமாக ஆரம்பிக்க இருப்பதாகவும், மற்றபடி இப்போதைக்கு அது கைவிடப்படவில்லை எனவும் கூட தகவல்கள் வெளியானது. இதனிடையே, கமலுடன் பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் சண்டை போட்டது தொடர்பான செய்தி, தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் உருவான 100 வது படம் தான் ராஜபார்வை. இந்த படத்தை சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கி இருந்தார்.

மேலும் கமலுடன் மாதவி, எல்.வி. பிரசாத், சாருஹாசன், ஒய். ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அப்போது ஒய் .ஜி. மகேந்திரன் மற்றும் கமல் ஆகிய இருவரிடையே ஒரு சிறிய விஷயத்தில் வாக்குவாதம் உருவானதாக தெரிகிறது. அப்போது கட்டபொம்மன் படத்தில் சிவாஜி நடித்ததை விட பாலிவுட் நடிகர் பிரித்விராஜ் இன்னொரு படத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக கமல் தெரிவித்துள்ளார். கமல் மற்றும் ஒய் ஜி மகேந்திரன் ஆகிய இருவருமே மிகப்பெரிய சிவாஜி ரசிகர்கள்.

தேவர் மகன் படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு அதற்கு சிவாஜி தான் பொருத்தமாக இருப்பார் என்ற அளவுக்கு வேறு யாரை வைத்தும் அந்த படத்தை தயார் செய்யாமல் இருந்தார் கமல்ஹாசன். அப்படி இருந்தும் அவர் சிவாஜியுடன் மற்றொரு நடிகரை ஒப்பிட்டு பேசியிருந்தது ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதன் காரணமாக கோபத்தில் கொந்தளித்த ஒய் ஜி மகேந்திரன், கமலை திட்டி விட்டு ராஜபார்வை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பியதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர் கமலின் சகோதரர் சாருஹாசன், நேரடியாக ஒய். ஜி. மகேந்திரன் வீட்டிற்கு சென்று உங்கள் இருவரின் சண்டையால் எனது தயாரிப்பில் உருவாகி வரும் ராஜாபார்வை படம் நின்று போகும் என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தான் மீண்டும் படப்பிடிப்பில் ஒய்ஜி மகேந்திரன் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...