விளையாட்டு

உலக ஆணழகன் பட்டத்தை தட்டித் தூக்கிய முதல் தமிழன்.. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த தஞ்சை இளைஞர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தருகின்றர். தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அந்த சந்தோஷத்தைக் கொண்டாடி வரும் வேளையில் அடுத்த சாம்பியன் பட்டம் ஒன்றை இந்தியா பெற்றுள்ளது.

உலக ஆணழகன் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இந்தியாவிலிருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேஸ்வர் பங்கு பெற்றார். அனைத்து சுற்றுக்களிலும் முன்னிலை பெற்று உலக ஆணழகன் சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி வாகை சூடினார்.

அக்சர், குல்தீப் பாத்தாச்சும் கத்துக்கோங்க.. ஹர்பஜனுக்கு பிறகு டி20 உலக கோப்பையில் ஜடேஜா செஞ்ச மோசமான சாதனை..

இதன் மூலம் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.10 இலட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தியது தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக கார்த்திகேஸ்வர் தெரிவித்துள்ளார். கோப்பையுடன் தாயகம் திரும்பிய அவருக்கு தஞ்சை மாவட்ட உடற்பயிற்சி மையங்கள், ஆணழகன் சங்கத்தினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஏற்கனவே உலக சதுரங்கப் போட்டி சாம்பியன், கிராண்ட் மாஸ்டர் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள தமிழன் பிரக்யானந்தா உள்ளிட்டோர் வரிசையில் தற்போது கார்த்திகேஸ்வரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
John

Recent Posts