புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை ஏன் எடுத்துக் கொள்கிறோம்?….

f3fb1a1763fc57af3d666295917fe7c1

ஆவணி மாத கடைசியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள். இது ஏன் என்று ஒருமுறை சிந்தித்தது உண்டா…. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். 

மேலும் இந்த மாதம் கன்னி ராசிக்கு உகந்த மாதமாகும். புரட்டாசியில் புதன் கிரகம் நன்றாக இருக்கும்.  அதெல்லாம் சரி, ஏன் பெரும்பாலான மக்கள் இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவை எடுத்துக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. ஆம், புதன் கிரகம் ஒரு சைவ கிரகமாகும். 

அதனால் தான் அசைவத்தை தவிர்த்து சைவ உணவை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் இம்மாதங்களில் பெருமாளுக்கு விரதம் இருந்து அவரை கை கூப்பி வணங்கி அவருக்கு படையலிட்டு சாப்பிட்டால் குடும்பத்திற்கு பண வரவும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
 
மேலும் அறிவியல் பூர்வமான நம்பிக்கை என்னவெனில் இம்மாதத்தில் சூரியனின் ஒளி வெளிச்சம் மிக குறைவாக இருக்கும். மேலும் பூமி சுழல்வதால் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றம் செயல்பாட்டால் அசைவ உணவுகள் செரிமானம் ஆகாது. இதனால் தான் இவற்றை தவிர்த்து விட்டு நாம் சைவ உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.