பொழுதுபோக்கு

பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், தங்கம்.. எதில் அதிக வருமானம்?

 

முதலீடுகள் என்பது பலவகைப்பட்டதாக இருந்தாலும் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவைகளில் தான் பொதுமக்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில சில மாதங்களாக பங்குச்சந்தை நல்ல ஏற்றத்தில் இருக்கும் நிலையில் மியூச்சுவல் ஃபண்டும் பொறுமையாக ஒரு சில ஆண்டுகள் காத்திருந்தால் நல்ல வருமானம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குறைந்த வருமானம் என்றாலும் ரிஸ்க் இல்லாதது தங்கத்தில் முதலீடு செய்வதுதான் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக பங்குச்சந்தை என்பது ரிஸ்க்கான முதலீடு என்றும் ஆனால் அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் கொடுக்கும் ஒரு முதலீடு என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பங்குச் சந்தையை விட தங்கம் அதிக வருமானம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு  அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தங்கம் 13 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் அதே காலத்தில் நிப்டியில்  முதலீடு செய்தவர்களுக்கு 10.5 சதவீதம் மட்டுமே வருமானம் கொடுத்திருப்பதாகவும் சென்செக்ஸ் பிரிவில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 9% மட்டுமே வருமானம் கொடுத்திருப்பதாகவும் புள்ளி விவர ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

எனவே இந்த ஆண்டின் அரையாண்டை பொறுத்தவரை பங்குச்சந்தையை விட தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கிறது. மேலும் அமெரிக்க அரசு விரைவில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அது நடந்தால் டாலரின் மதிப்பு இறங்கும் என்றும் அப்போது தங்கத்தின் மதிப்பு இன்னும் உயர தொடங்கிவிடும் என்றும் தற்போது தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் நாளுக்கு நாள் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டால் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை தான் அதிக அளவில் வாங்கி வருகின்றன. குறிப்பாக ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தின் போது இந்தியா உள்பட பல நாடுகள் தங்கத்தை தான் அதிக அளவில் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சீனா அதிகமான அளவு தங்கத்தை வாங்கி குவித்ததால் தான் உலக சந்தையில் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்தது என்றும் இதன் காரணமாக தான் தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வருமானம் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ச்சியாக இதுபோன்ற அதிக வருமானத்தை கொடுக்காது என்றும் பொதுவாக முதலீடு செய்பவர்கள் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ,தங்கம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு தகுந்த முதலீட்டு ஆலோசகர் இடம் கலந்து ஆலோசித்து பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts