அதிரடி கூட்டணி!! 34வது படத்தில் ஹரியுடன் இணையும் விஷால்!!

ஆக்‌ஷன் படங்களுக்கு ஏற்ற ஹீரோ விஷால், அவர் அறிமுகமான படம் செல்லமே. அந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் குறைவு என்றாலும் கதைப்படி ஒரு கம்பீரமான வருமான வரித் துறை அதிகாரியாக வருவார். அந்த படத்திற்கு பொருத்தமாகவும் இருப்பார்.

இயக்குனர் ஷங்கரி உதவி இயக்குனர் காந்தி கிருஷ்ணா இந்தபடத்தை இயக்கி இருப்பார். அறிமுகப்படத்திலேயே எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. இரண்டாவது படம் சண்டைக்கோழி தளபதி விஜய்க்கு லிங்குசாமி சொன்ன கதை.

பின் பல்வேறு காரணங்களால் தளபதி நடிக்க முடியாமல் போக, விஷால் நடிக்க முடிவாகி இருக்கிறது. அந்த படம் விஷாலுக்கு நல்ல பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அதுபோன்ற ஒரு வெற்றி விஷாலுக்கு இதுவரை அமையவில்லை.

இரண்டாவது படமே குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. சண்டைகோழி படத்தில் மீரா ஜாஸ்மின் கதாப்பாத்திரத்திற்கு தீபிகா படுகோனையெல்லாம் நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், மீரா ஜாஸ்மின் அளவிற்கு அந்த கேரக்டருக்கு யாரும் பொருந்தியிருக்க முடியாது.

சண்டக் கோழி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. ஆனால், அந்த படம்  தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு விஷால் ஆக்‌ஷன் படங்கள் நடித்தாலும், தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் படங்களுகென சில இயக்குனர்கள் உள்ளனர். அப்படி ஒருவரோடு கூட்டணி சேர்ந்து ஹிட்டான படம் ‘சண்டக் கோழி’.  ஹரி குடும்ப பாங்கான ஆக்‌ஷன் படங்களை எடுப்பதில் வல்லவர். பெரும்பாலும் தென் தமிழகத்தை கதைக் களமாக கொண்டு படம் எடுப்பார்.

அதன் பின் ’பூஜை’ படத்திலும் அதே கூட்டணி தொடர்ந்தது. தற்போது விஷால் தன்னுடைய 34வது படத்தில் ஹரியுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த அதிரடி கூட்டணி படத்தின் டைட்டில் வீடியோவை டிசம்பர் 1ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மக்களை ஈர்க்கும் வகையிலான குடும்ப படங்கள் சமீபத்தில் எதுவும் வெளிவராத நிலையில், விஷால் ஹரியின் இந்த கூட்டணி அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யுமா என்பதை பார்ப்போம்!!

vishal movie poster

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.