விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த அக்கா, தங்கை நடிகைகள்!

தமிழ் திரையுலகமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய அரிதான கலைஞன் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் கதாநாயகன் என்றால் வெள்ளையாக இருப்பார்கள் என்றிருந்த நிற பிம்பத்தை உடைத்த பெருமை விஜயகாந்த் அவர்களை சேரும். விஜயகாந்த் போலீஸ் சட்டையை அணிந்தாலே படம் ஹிட்டுதான். நிஜ போலீஸ் இப்படித்தான் இருக்க வேண்டுமென ரசிகர்களை பேச வைத்தவர்.

இவர் ஒவ்வொரு படத்திலும் சண்டைகாட்சிக்காக மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார், இதனாலேயே இவரது சண்டை காட்சிக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவானது. இவரை தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர், கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுவதும் வழக்கம்.

இவர் நடித்த படங்களில் சாதி மற்றும் அரசியல் கருத்துக்களை குறித்து பேசி வெகுவாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் விஜயகாந்த், சினிமாவிற்கு வந்த தொடக்க காலத்தில் சில நடிகைகள் இவருடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் 80, 90களில் முன்னணி ரஜினி, கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக வைத்து பிரபலமானவர் தான் அம்பிகா. 1979ஆம் ஆண்டு இயக்குநர் தேவராஜ் – மோகன் இயக்கத்தில், சுதாகர், விஜயன், ஷோபா, ஒய்.விஜயா நடித்த சக்களத்தி படத்தில் மூலம் அம்பிகா அறிமுகமானார். அதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் நடித்தாலும் பாக்கியராஜ் உடன் நடித்த அந்த 7 நாட்கள் படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இவர் ஆரம்பத்தில் விஜயகாந்த் உடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின் 1986 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் தழுவாத கைகள் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அப்போதைய காலகட்டத்தில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்த நடிகை அவருடைய தங்கை ராதா தான். இவர் பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை ராதா 1981 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் கார்த்திக் உடன் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு தாறுமாறான ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல், வெள்ளை ரோஜா, இடையா கோவில், மனகனக்கு, காதல் பரிசு மற்றும் அண்ணாநகர் முதல் தெரு போன்ற படங்களில் அம்பிகாவும், ராதாவும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

காதலர் தினம் படத்தின் ஹீரோயினுக்கு இப்படி ஒரு நிலைமையா? வாழ்க்கையின் மறுபக்கம்!

ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த இரு நடிகைகளும் முதலில் விஜயகாந்துடன் நடிக்க மறுத்துள்ளனர். அதன் பின் நடிகை ராதாவும் அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், சத்தம் ஒரு விளையாட்டு, உழவன் மகன் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...