இயக்குனராக வேண்டுமென்ற ஆசையில் விஜயகாந்தை சந்தித்த பிரபலம்.. நடிகராக்கி அழகு பார்த்த கேப்டன்.. அவரு வாழ்க்கையே மாறிடுச்சு..

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலம் ஹீரோவாகி வாழ்ந்து வருபவர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் சிறந்த நடிகராக உருவாவதற்கு முன்பாக, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். பல துன்பங்களையும், அவமானங்களையும் கடந்து வந்த விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தனக்கான ஒரு இடத்தையும் கச்சிதமாக பிடித்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்து வந்த விஜயகாந்த், ஒரு கட்டத்திற்கு பின்னர் தனது டிராக்கையே மாற்றி இருந்தார். மக்களுக்காக போராடும் போலீஸ் அல்லது அரசு அதிகாரி கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றி மக்கள் மனம் கவரவும் செய்திருந்தார் விஜயகாந்த். மேலும் விஜயகாந்த் படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகள் மிக அசத்தலாக இருக்கும். இதன் பெயரிலும், பலரும் விஜயகாந்தின் ரசிகர்களாக மாறி இருந்தனர்.

தொடர்ந்து, ஆக்ஷன் ஹீரோவாக நிறைய படங்களில் நடித்து வந்த விஜயகாந்த், கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த், ஒருமுறை எதிர்க்கட்சி தலைவராகவும் தமிழக அரசியலில் தடம் பதித்திருந்தார்.

அந்த சமயத்தில் நிச்சயம் வருங்கால தமிழகத்தின் முதல்வராக வருவார் என விஜயகாந்தை பலரும் கருதி இருந்தனர். அதே போல, நிஜ வாழ்க்கையிலும் சினிமா பிரபலங்கள் தொடங்கி முடியாமல் தவித்த மக்கள் பலருக்கும் தனது கரம் நீட்டி உதவிகளை செய்துள்ளவர் ஆவார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியல்லாமல் அப்படியே முடங்கி போனார் விஜயகாந்த்.

பொது வெளிகளில் கூட தோன்ற முடியாமல் வீட்டிலேயே விஜயகாந்த் முடங்கி போக, பல பிரபலங்களும் அவரை வீட்டில் சென்று சந்தித்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்கள் முன்பாக மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பி இருந்தார். அப்படி இருக்கையில், தேமுதிக நிகழ்ச்சியில் தொண்டர்களை நேரில் சந்தித்ததால் அவர்கள் அனைவரும் மனம் நெகிழ்ந்து போயிருந்தனர்.

இதனிடையே, பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் தான் நடிகராக மாறியதற்கு காரணம் விஜயகாந்த் என ஒரு நேர்காணலில் கூறி உள்ளார். விஜயகாந்த நடிப்பில் உருவான பூந்தோட்ட காவல்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் லிவிங்ஸ்டன். இதன் பின்னர் தான், பல திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருந்தது.

பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு பற்றி பேசிய லிவிங்ஸ்டன், “நான் விஜயகாந்த்திற்கு ஒரு கதை சொல்வதற்காக தான் சென்றிருந்தேன். அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததால் அடுத்த நாள் மீண்டும் வர சொன்னார். அவரது நண்பர் ராவுத்தர் இல்லை என்பதால் அடுத்த நாள் மீண்டும் வந்து கதை சொல்லும்படி கூற, நான் மறுநாள் சென்ற போது அனைவருமே இருந்தனர்.
Livingston

நான் கதையை மீண்டும் சொல்ல, அவர்களுக்கும் பிடித்தது. ஆனால், அவர்கள் அடுத்து உருவாக்க இருந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தில் நடிப்பதற்காக ஒருவரை தேடி கொண்டிருந்ததாகவும், நான் கதை சொல்ல முதலில் போன போது நான் அந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வருவேன் என என்னை மீண்டும் வர வைத்து அனைவரின் விருப்பத்தை கேட்டு என்னை அந்த படத்தில் நடிக்கவும் வைத்திருந்தார் விஜயகாந்த்” என லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...