இது க்யூட் GOAT!.. வித விதமான உடைகளில் வெரைட்டி போஸ் கொடுத்த விஜய்யின் லேட்டஸ்ட் ஹீரோயின்!..

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் நாயகி மீனாட்சி சௌத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள விதவிதமான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார் மீனாட்சி சௌத்தரி. தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். இந்த வாரம் வெளியாக உள்ள ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

GEYHv baEAANIdB

விஜய் பட ஹீரோயின்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீனாட்சி சௌத்ரி.

மாடல் அழகியான இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 லட்சம் பேர் ஃபாலோயர்களாக உள்ளனர். கியூட்டான அழகுடன் ஒல்லியான தேகத்துடன் வலம் வரும் மீனாட்சி சௌத்ரி ஓர் படத்தில் மீசையே இல்லாமல் இளம் லுக்கில் நடித்து வரும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இவர் கடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

GEYHvczbEAAyOK9

சிங்கப்பூர் சலூன் படத்தின் பிரமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் மீனாட்சி செளத்ரி நடிகர் விஜய் பற்றியும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்து வருகிறார்.

சிங்கப்பூர் சலூன் வருது:

கடந்த பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியான ப்ளூடூத் காதல் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி என இரு ஹீரோயின்கள் அந்த படத்தில் நடித்து இருந்தனர்.

சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிக்கும் போது அந்த செட்டை பார்த்து ஆச்சரியப்பட்டார் மீனாட்சி சௌத்ரி என்றும் ஆனால் படம் வெளியாகும் போது மகேஷ் பாபு, விஜய் படங்கள் என வேற லெவலுக்கு சென்று எங்களை ஆச்சரியப்படுத்தி விட்டார் மீனாட்சி என ஆர்த்தி பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

GEYHvK bEAE4 XC

இளம் நடிகையான இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. தி கோட் படம் வெளியானால் ராஷ்மிகா மந்தனாவை போல இவரது மார்க்கெட்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.