நான் ஒருவழியா ஷாருக்கான பழிவாங்கிட்டேன்னு நினைக்கிறேன்…. என்ன சொல்ல வருகிறார் மக்கள் செல்வன்…?

பாலிவுட்டிலும் வில்லனாக நடித்து அசத்தி விட்டார் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஷாருக்கான் நடித்த ஜவான் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. இயக்கியவர் நம்மூரு அட்லி.

மியூசிக் அனிருத். ஹீரோயின் நயன்தாரா. இந்தப் படத்திற்காக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதைப் பார்த்தா ரொம்பவே அசந்து விடுவீங்க. ஹாலிவுட் ஸ்டைலில் இங்கிலீஷ் பேசுறாரு. தமிழ்ல அவர் பேசுனதுல இருந்து கொஞ்சம் சேம்பிள் உங்களுக்காக…

Nayanthara
Nayanthara

ஜவான்ங்கற இந்தப்படம் அட்லீயால தான் தொடங்குச்சு. அவர் தான் கூட லைப்ல பழகுற மனுஷங்கக் கிட்ட எப்படி பழகணும்னு நல்லா தெரிஞ்சிருக்காரு. இந்தப் படத்துல ரொம்ப சுதந்திரமா நிறைய டிஸ்கஸ் பண்ணி நடிக்க முடிஞ்சது.

நிறைய வேலை வாங்குனாரு. நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ணுனேன். அந்தப் பொண்ணுக்குத் தெரியாது. ஆனா ஜானு இல்லாத ராமன் எங்க இருக்காங்க. எல்லா இடத்துலயும் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

நான் லவ் பண்ண பொண்ணு வந்துட்டு ஒரு சேட்டு பொண்ணு. ஆனா அந்தப் பொண்ணு அப்ப ஷாருக்கான் சாரை லவ் பண்ணிட்டு இருந்துச்சு. அதுக்கு பழிவாங்க இத்தனை வருஷம் எனக்கு ஆவும்னு தெரியாது. நான் ஒருவழியா அவரைப் பழிவாங்கிட்டேன்னு நினைக்கிறேன்.

Jawan
Jawan

அட்லியோட கருப்பு ரொம்ப அழகான கருப்பு. அழகா இருக்கீங்க. நல்லா இருக்கு. டியர் ஷாருக்கான் ஐ கேன் பைட் வித் யு. ஐ கேன் ஆங்கிரி வித் யு. நான் இந்த மனுஷன வந்து மெல்போர்ன்ல தான் பர்ஸ்ட் பார்த்தேன். எங்களுக்கெல்லாம் சீட்டு போட்டுருந்தாங்க. நான் எனக்கு மட்டும் சீட்டு இல்லன்னு எங்கயோ தேடிக்கிட்டு இருந்தேன்.

எனக்கு சீட் வந்து ஷாருக்கான் பக்கத்துல இருந்துச்சு. சரி. இந்த மனுஷன்கிட்ட போய் எனக்கு எப்படி சீட் கிடைக்கும்னு நினைச்சி நான் போகல. அப்புறம் தான் கூப்பிட்டு வச்சி உட்கார வச்சாங்க. திடீர்னு சர்ப்ரைஸா வந்து இவரு ரொம்ப நல்ல நடிகன்னு சொன்ன உடனே எனக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு. ஓ இவருக்கு நம்ம நல்லா தெரிஞ்சிருக்குன்னு சொல்லிட்டு.

Atlee Sharukhan
Atlee, Sharukhan

அப்புறம் ஆப்டர் பார்ட்டில மீட் பண்ணினேன். நான் வெறும் ஸ்டேஜிக்காக சொல்லல. நீ ரொம்பவே நல்ல ஆக்டர். என் மூஞ்சிய புடிச்சிக்கிட்டு கேட்டாரு. உனக்கு என்னப்பா வயசுன்னு கேட்டாப்ல. 40 வயசாகுதுன்னு சொன்னேன். வெரிகுட் ஆக்டர்னு சொன்னாரு.

எனக்கு அவருக்கிட்ட ரொம்ப பிடிச்சது வந்து ஒரு ஆக்டரை எப்படி ட்ரீட் பண்றதுன்னு… அது தான் ஒரு ஆக்டரோட முக்கியமானது. சோ நம்ம முன்னாடி இருக்குற ரத்தமும், சதையுமா இருக்குற ஒரு மனுஷனை ட்ரீட் பண்ணலன்னா எப்படி ஒரு கற்பனையா எழுதுற கதாபாத்திரத்தை எப்படி புரிஞ்சிக்கிறதுங்கற பெரிய கேள்வி எனக்கு இருக்கும்.

நம்ம முன்னாடி இருக்குற ஆக்டரை எப்படி ட்ரீட் பண்றதுங்கறது ரொம்ப முக்கியமான குவாலிட்டின்னு நினைக்கிறேன். அது அவருட்ட ரொம்பவே நல்லாருக்கு. யோகிபாபு சீனுக்குள்ள போன உடனே சர்ப்ரைஸா டயலாக்க எல்லாம் டெலிவரி பண்ணுவாரு. யோகிபாபுவோட சிரிக்காம வேலை செய்றது ரொம்ப கஷ்டம். அனிருத் கொஞ்ச நேரத்துல மொத்த ஸ்டுடியோவையுமே பத்த வச்சிட்டீங்க. நெருப்பு பத்திக்கிச்சி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews