டபுள் பேரல் துப்பாக்கியாக வெடிக்கும் விஜய்!.. ப்பா என்னவொரு வெறித்தனம்.. லியோ டிரெய்லர் கொலமாஸும்மா!..

வெளியானது லியோ டிரெய்லர்

நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தின் படு மெர்சலான டிரெய்லர் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இந்த முறை என் அண்ணனுக்கு நான் தான் டா செய்வேன் என அட்லீ மோடுக்கு மாறி அதிர வைத்துள்ளது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. கேஜிஎஃப் 2 படத்தின் டிரெய்லர் வெளியான போது இருந்த அதிர்வலையை விட இரண்டு மடங்கு லியோ படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோல்விகளுக்கு பதிலடி

பீஸ்ட், வாரிசு என வரிசையாக அடுத்தடுத்து இரண்டு படங்கள் விஜய் ரசிகர்களை திருப்தி படுத்த முடியாத அளவுக்கு வெளியாகி இருந்த நிலையில், மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்தார் விஜய். இந்த படத்தின் கதை பாட்ஷா படத்தின் கதை என்றும் கூறப்பட்டது. டிரெய்லரை பார்த்தால் கிட்டத்தட்ட பாட்ஷா போலவே உள்ளது. ஆனால், டபுள் ஆக்‌ஷன் ட்விஸ்ட் இருந்தால், சிறப்பாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

ஒரே ட்ரெய்லரில் ஒட்டுமொத்த நடிகர்களையும் ஆரம்பத்தில் விஜய் கதை சொல்வதில் ஆரம்பித்து மிஷ்கினை அடித்து துவம்சம் செய்வதில் இருந்து, நல்ல போலீசாக கெளதம் மேனனை காட்டுவது, மனைவியாக த்ரிஷா, மகளுடன் ஃபீலிங், பார்த்திபன் விஜய்யை லியோ தாஸ் என துரத்தும் ஆண்டனி தாஸ் சஞ்சய் தத், அவரது தம்பியான அர்ஜுன் என லியோ ட்ரெய்லரில் அத்தனை பேரையும் எடிட்டர் அடுக்கிக் கொண்டு வந்து காட்டி அசத்தியிருக்கிறார்.

லோகேஷ் சம்பவம்:

வயசான குடும்பத் தலைவன் லுக்கில் நடிகர் விஜய் இதுவரை எடுக்காத ரிஸ்க்கை இந்த முறை லியோவில் எடுத்து கெட்டப் சேஞ்ச் செய்து நடித்திருந்தாலும், ட்ரெய்லரில் ஃபேக்காக இல்லாமல் தாறுமாறாகவே உள்ளது.

அதே வேளையில் தனது ரசிகர்களை மகிழ்ச்சியாக்க கடைசியாக லியோ தாஸ் லுக்கில் வித்தியாசமான மேனரிஸத்தில் வந்து கொல மாஸ் செய்யும் காட்சிகளும் ரசிகர்களை வாயை பிளக்க வைக்கிறது.

வரும் அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜைக்கு டபுள் பேரல் துப்பாக்கி போல வெடிக்க ரெடியாகி விட்டார் தளபதி விஜய் என்பது தெரிகிறது. படம் வெளியான பின்னரும் டிரெய்லர் போலவே படு மிரட்டலாக இருந்தால் நிச்சயம் இண்டஸ்ட்ரி ஹிட் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...