படக்குழுவுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் விஜய்!.. பிரபலம் வெளியிட்ட செம வீடியோ!..

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன் நடிகர் விஜய் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை அந்த படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தளபதி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் பிரேக்கை இதுபோல கிரிக்கெட் விளையாடுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக விளையாடுவார்கள். படப்பிடிப்பு இல்லை என்றதும் நடிகர் விஜய் கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொள்ள மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரிடமும் அன்பாக பேசியும் பழகவும் கூடியவராகவே இருந்து வருகிறார்.

விஜய் விளையாடும் வீடியோ:

வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. அந்த படத்தின் அதிகமான படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடைபெற்றது. அங்கே ஓய்வு நேரத்தில் நடிகர் விஜய், ரஷ்மிகா மந்தனா, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பட குழுவினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

அப்போது பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் 4 ரன்கள் தான் என எதிரணியினர் சொல்லும் போது அதெல்லாம் கிடையாது அது சிக்ஸ் சிக்ஸ் என விஜய் செல்ல சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்று ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சில க்யூட்டான வீடியோக்களையும் வெளியிடப் போவதாக பாடலாசிரியர் விவேக் அறிவித்து தளபதி ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்ய வைத்து விட்டார்.

சிக்ஸ்.. சிக்ஸ்:

அடுத்தடுத்து நடிகர் விஜயின் வீடியோ காட்சிகள் வெளியாகி வரும் நிலையில், பின்னாடியே அஜித்தின் வீடியோ வரும் பாருங்க விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே துபாயில் அஜித் ஆட்டம் போட்ட வீடியோ, செல்போனை பிடுங்கிய வீடியோ வெளியானது போதாதா என்றும் கேட்டு அஜித் ரசிகர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் மார்ச் மாதம் ஷூட்டிங் முடிந்து ஜூன் 13ம் தேதி வெளியாகும் என்பது வரை தகவல்கள் வெளியான நிலையில், விடாமுயற்சி படம் இந்த ஆண்டாவது வெளியாகி விடுமா இதுவரை எந்தவொரு அப்டேட்டையும் சொல்லாமல் அப்படி அஜர்பைஜானில் என்ன தான் நடக்கிறது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.