க்ளீன் ஷேவ் லுக்கில் இளமையான தோற்றத்தில் விஜய்.. ரவுண்டுக்கட்டிய ரசிகர்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்புக்கு வந்த நடிகர் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஏராளமானோர் அவரை சூழ்ந்து கொண்டு தளபதி என கத்திய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என இரு திரைப்படங்கள் வெளியாகின. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பேமிலி டிராமா படமாக வாரிசு கடந்த பொங்கலுக்கு வெளியானது.

சென்னையில் விஜய்:

நடிகர் அஜித்தின் துணிவு படத்துடன் நேருக்கு நேர் மோதிய அந்த திரைப்படம் வசூலில் துணிவை பின்னுக்குத் தள்ளி 300 கோடி வரை வசூல் ஈட்டியது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு வெளியான லியோ புகைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் ரெண்டாம் பாதி சொதப்பம் என்றும் விமர்சனங்கள் வந்தாலும் நடிகர் விஜய்யின் வித்தியாசமான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு அலை மோதிய நிலையில் அந்தப் படம் அதிகபட்சமாக 600 கோடி ரூபாய் வரை வசூல் அள்ளியது.

க்ளீன் ஷேவ் லுக்:

இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடிகர் விஜய் நடித்த வருகிறார். அப்பா மற்றும் மகன் என டபுள் ஆக்ட்சனின் விஜய் நடித்து வருவதை ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு ரிவீல் செய்து விட்டார். மேலும் இந்த படம் ஹாலிவுட் வகையறா படங்களைப் போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், தாய்லாந்து மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. மீண்டும் தற்போது சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கடைசியாக இலங்கையில் சில காட்சிகள் படமாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று நடிகர் விஜய் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த போது கிளீன் ஷேவ் லுக்கில் செம யங்காக இருந்ததை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசைப்பட்டு நெருங்கினார். ரசிகர்களை பார்த்து நடிகர் விஜய் கையசைத்து விட்டு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.