விஜயகாந்த் உடன் எட்டு முறை மோதிய விஜய்! ஜெயித்தது யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படம் ஆன தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிகை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பட்சத்தில் GOAT திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க உள்ளார், எந்த பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் தளபதி விஜய் தனது தொடக்க காலங்களில் தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்ததின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு விஜயகாந்தின் திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைய துவங்கினார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் விஜயகாந்த் உடன் இணைந்து தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்திருக்கிறார்.  தளபதி விஜய் படிப்படியாக முன்னேறும் சமயங்களில் விஜயகாந்த் உடன் எட்டு திரைப்படங்களில் நேரடியாக மோதியுள்ளார் இந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை இதில் பார்க்கலாம்.

1996 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் தாயகம் திரைப்படம் வெளியானது அதே ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படமும் வெளியானது. இதில் தாயகம் திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது. கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது.

அடுத்து 1997 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் தர்ம சக்கரம் திரைப்படம் வெளியானது. அப்பொழுது விஜய் நடிப்பில் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமாராக வெற்றி பெற்றிருந்தது.

2000 ஆம் ஆண்டு விஜயகாந்த்-க்கு வானத்தைப்போல திரைப்படம் வெளியாகி இருந்தது. அதே நேரத்தில் தளபதி விஜய் நடிப்பில் கண்ணுக்குள் நிலவு திரைப்படம் வெளியாக இருந்தது. அந்த நேரத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வெள்ளி விழா கண்டது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றிருந்தது.

2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன் திரைப்படமும் தளபதி விஜய் நடிப்பில் பிரண்ட்ஸ் வெளியாக இருந்தது. இந்த போட்டியிலும் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். தளபதி விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான திரைப்படமாக அமைந்திருந்தது.

மீண்டும் அதே ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் தவசி திரைப்படம் வெளியாகியிருந்தது. தளபதி விஜய் நடிப்பில் ஷாஜகான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் விஜயகாந்த் நடித்த தவசி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது.

2002ல் கேப்டனின் ராஜ்ஜியம் திரைப்படம் வெளியானது. தளபதி விஜய் நடிப்பில் தமிழன் திரைப்படமும் வெளியாகி இருந்தது இந்த போட்டியிலும் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். அதே ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படமும் தளபதி விஜய் நடித்த பகவதி திரைப்படமும் நேருக்கு நேராக மோதி உள்ளது. இதில் பகவதி திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருந்தாலும் விஜயகாந்தின் ரமணா திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகத்தை திரும்பி பார்க்க வைத்த மெகா ஹிட் வெற்றி படம்.

இதே இடத்தில் 2003ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சொக்கத்தங்கம் திரைப்படம் வெளியானது. அதே நேரத்தில் தளபதி விஜய் நடிப்பில் வசீகரா திரைப்படமும் வெளியானது. இதிலும் விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் திரைப்படம் பல வாரங்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதுவரை நடந்த நேருக்கு நேர் மோதல்களை வைத்து பார்க்கும் பொழுது விஜயகாந்தின் திரைப்படங்கள் தளபதி விஜயின் திரைப்படங்களை விட மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.