ஆல் ஏரியாலயும் ஐயா கில்லி டா!.. ஹாலிவுட் நடிகரையே ஓடவிட்ட விஜய்!..

தமிழ் சினிமா ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் லியோ. இப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பார் மற்றும் விஜய்,திரிஷா,அர்ஜுன்,சஞ்சய் தத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாத்துடன் பான் இந்திய அளவில் இப்படம் உருவாகி இருக்கும். இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமாதான் என்ற போக்கை மாற்றியமைத்தது தமிழ் சினிமா.

இந்திய சினிமாவில் பாலிவுட் சினிமா கோலோச்சி கொண்டிருக்கும் போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அது மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பையும் பெற்று அதன்பின் தொடர்ந்து வெளியான ரஜினி படங்கள் தமிழ் சினிமா அந்தஸ்தை உயரச் செய்தது.

இதன் மூலம் தொடர்ந்து இந்திய சினிமாவில் தமிழ் சினிமா கோலோச்சும் நிலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழி படங்களான கன்னட சினிமாவின் கே.ஜி.எப் தெலுங்கு சினிமாவின் பாகுபலி போன்ற படங்கள் உலகளவில் தங்களின் அந்தஸ்தை நிலைநாட்டிக் கொண்டது. இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் 1000 கோடிக்கு மேல் வசூலித்து உலக அளவில் தங்கள் அந்தஸ்தை நிலைநாட்டி கொண்டது.

ஆனால் மற்றும் மொழி படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்த தமிழ் சினிமா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தான் எழுந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. அதனை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது.

தற்பொழுது இந்த சாதனையை லியோ படத்தின் வசூலை நெருங்கிக் கொண்டு வருகிறது. வெளியான 4 நாட்களில் சுமார் 403 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் முதல் நாளிலே அதிக வசூல் செய்த திரைப்படம் இதுதான் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் தன் கொடியை பறக்க விட்டிருக்கிறார் விஜய்.

அதில் இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமாக லியோ படம் வசூலி வசூலித்ததாகவும் இதனுடன் வெளியான டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகாப்ரியோ படம் வெறும் 23 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்து பின்னுக்கு தள்ளியதாகவும் அந்நாட்டின் பத்திரிகையான வெரைட்டி நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஏரியாவாக இருந்தாலும் ஐயா கில்லி டா என்று சொல்லி அடித்திருக்கிறார் விஜய்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...