போட்டோ பிடித்ததால் பொழப்பு போச்சே.. எத்தனையோ பேருக்கு உதவுற அஜித்தா அப்படி செஞ்சாரு!

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் ஆரவ் மற்றும் விமான நிலையத்தில் அஜித் செல்லும் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் என பல விஷயங்கள் வைரலாகி வந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் போட்டோ எடுத்த ஒரு ஊழியரின் பொழப்பு போய் விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது வீட்டை திறந்து வைத்து 100 பேருக்கு மேல் உள்ளே பாதுகாப்பாக நடிகர் அஜித் வைத்துக் கொண்டார் என்றும் போகும் போது ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாயை சத்தமே இல்லாமல் கொடுத்து அனுப்பினார் என பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அஜித்தை பற்றி பேசியிருந்தார்.

உதவி செய்த அஜித்

அமீர்கான், விஷ்ணு விஷால் என வெள்ளத்தில் தத்தளித்த நடிகர்களுக்கும் உரிய நேரத்தில் அஜித் பெரிய உதவி செய்திருக்கிறார். மேலும், அஜித்தின் ரசிகர்கள் பல இடங்களில் உதவி செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இப்படி பலருக்கு உதவி வரும் நடிகர் அஜித்தா ஒரு ஊழியரின் வேலை போக காரணமாக மாறிவிட்டார் என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் அமர்க்களமாக நடைபெற்று வருகிறது.

போட்டோவால் போன பொழப்பு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித் அஜர்பைஜானுக்கு கிளம்பிச் செல்லும் போது திரிஷாவும் கூட சென்ற வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும், அந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ராவும், பிரியா பவானி சங்கரும் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

அஜர்பைஜானில் அர்ஜுன் உடன் அஜித் பைக்கில் சென்ற காட்சிகளும், அர்ஜுனை அழகாக அஜித் போட்டோ எடுத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

அஜித் காரணமா?

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆசையாக அஜித்துடன் ஊழியர் ஒருவர் போட்டோ எடுத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் கெட்டப்பிலேயே நடிகர் அஜித் அந்த நபருடன் போட்டோ எடுத்துக் கொண்ட நிலையில், அதை தனது வாட்ஸ்அப் டிபியாக அவர் வைக்க அது இணையத்தில் வைரலாக பரவி விட்டது.

இந்த விவகாரம் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு தெரிந்த நிலையில், நடிகர் அஜித்தின் காது வரைக்கும் சங்கதி எட்டி விட்டது. படப்பிடிப்பு முடிவதற்குள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் விட்டுவிடுங்கள் என அஜித் சொல்லி விட்டாராம்.

ஆனால், அஜித் அப்படி சொல்லிய பின்னரும் அந்த நபரை வேலையை விட்டு நீக்கி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பல பேருக்கு படியளந்து வரும் அஜித்தா இப்படி செய்து விட்டார் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.