14 வயதிலேயே ஹீரோயின்.. 68 வயது வரை நடிப்பை தொடர்ந்து தடம் பதித்த நடிகை கேஆர் இந்திரா தேவி!

10 வயதில் திரை உலகில் நடிக்க ஆரம்பித்து அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 14 வயதில் நடிகையாகவும் மாறியவர் தான் கேஆர் இந்திரா தேவி. இவர் நடிகை மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1949 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த கேஆர் இந்திரா தேவி, 10 வது வயதிலேயே கண் திறந்தது என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பாத காணிக்கை, சுமைதாங்கி போன்ற படங்களில் நடித்த அவர் ‘கொஞ்சும் குமரி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் தான் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கை வாழ்வதற்கே, பெற்றால் தான் பிள்ளையா, கந்தன் கருணை, எங்க மாமா, பாதுகாப்பு, மூன்று தெய்வங்கள், தசாவதாரம், அழியாத கோலங்கள், இளமைக் கோலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி அவர் கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

kr indhradevi1

இவர் கடைசியாக ரிச்சர்ட்ஸ் நடித்த கிரிவலம் என்ற திரைப்படத்தில் அவருடைய பாட்டியாக நடித்திருப்பார். சென்னை தேனாம்பேட்டையில் தனது குடும்பத்துடன் நடிகை இந்திரா தேவி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். சங்கரநாராயணன் என்பவரை இந்திரா தேவி திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். இவரது இறுதிச் சடங்கில் விஷால் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

நடிகை கே.ஆர்.இந்திராதேவியின் நடிப்பு சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...