பிக் பாஸ் ஜோவிகா பள்ளி படிப்பை நிறுத்த இதுதான் காரணமா? ஆசிரியர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்றுள்ள ஜோவிகா பள்ளி படிப்பை ஏன் நிறுத்தினார் என்றும் அவருக்கு பள்ளியில் என்ன கொடுமைகள் நடந்தது என்றும் அவரது ஆசிரியை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு அனைவரையும் பதறச் செய்துள்ளது.

ஜோவிகாவின் ஆசிரியரின் பதிவு:

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.. என ஆரம்பித்து ஜோவிகாவின் ஆசிரியர் ஒருவர் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அந்த பதிவில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ஏன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார் என்பதற்கான விளக்கத்தை தெளிவாக கொடுத்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஏழில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

முதல் வாரத்திலேயே அவருக்கும் நடிகை விசித்ராவுக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு சண்டை முற்றிவிட்டது. ஜோவிகா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார். அது ரொம்பவே தப்பு என்றும் 12-ஆம் வகுப்பு வரை அடிப்படை கல்வி அனைவருக்கும் அவசியமானது என்ற விசித்ரா உன்னோட பொறுப்பற்ற தன்மையால் தான் நீ ஸ்கூல் படிப்ப விட்டுட்ட என்றும் உனக்கு தமிழ்ல உன் பேரு எழுத தெரியுமா என மோசமாக விமர்சித்த நிலையில், நான் படிப்பு வேணாம்னு சொல்லல, படிக்கப் பிடிக்காதவங்ககிட்ட படி படின்னு பிரஷர் போட்டு அவங்க தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துக்கு தூண்டாதீங்கன்னு நான் சொல்றேன் என அழுத்தம் திருத்தமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் ஜோவிகா ஏன் இந்த அளவுக்கு கோபப்படுகிறார் என்றும் அவர் பள்ளிப்படிப்பை நிறுத்த என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஆசிரியை என்கிற பெயரில் ஒருவர் பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதில் ஜோவிகா நன்றாக படிக்கக் கூடிய பெண் தான் என்றும் சுமார் 6 ஆண்டுகள் தான் பள்ளி ஆசிரியராக இருந்ததாகவும், ஜோவிகாவுக்கு மட்டுமில்லை ஏகப்பட்ட இளம் பருவ மாணவர்களுக்கு பள்ளிகளில் சக மாணவர்களால் ஏற்படும் சீண்டல்கள் மற்றும் ஆசிரியர்கள் பேசும் கிண்டல்கள் போன்றவை பலரையும் பெரிதும் பாதித்து வருகிறது என்றார்.

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பள்ளியில் சில ஆசிரியர்கள் அவரது காதில் படும்படியே ஜோவிகாவின் அம்மா பற்றி தவறாக பேசியுள்ளனர் என்றும் அதன் காரணமாகவே அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

ஜோவிகா பள்ளி படிப்பிலும், விளையாட்டிலும் மற்ற கலை நிகழ்ச்சிகளிலும் சிறப்பாக பங்கு பெறுபவர் என்றும் தலைமைப் பண்பு கொண்டு சரியான முடிவுகளை எடுப்பவர் என்றும் அந்த ஆசிரியை ஜோவிகாவை பாராட்டியுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சில ஆசிரியர்களே மாணவர்களின் மனதை கஷ்டப்படுத்தும்படி பேசுவதும் அவர்களை ஊக்கப்படுத்தாமல் மட்டம் தட்டுவதுமே ஜோவிகா போன்ற மாணவர்கள் பள்ளியை வெறுக்க காரணம் என்று கூறியுள்ளானர்.

தான் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த பள்ளியை விட்டு நின்று விட்டதாகவும், நான் இருந்திருந்தால் ஜோவிகாவை பள்ளியை விட்டு நிற்பதை தடுத்து இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

மாணவர்களை மேம்பட்டவர்களாக மாற்றவே பள்ளிக்கு பெற்றோர்கள் பல லட்சம் செலவு செய்து அனுப்புகின்றனர். ஆனால், சில ஆசிரியர்கள் மாணவர்களின் திறமையை கண்டறியாமல் அவர்கள் எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லி சொல்லியே தற்கொலை எண்ணம் வரை தூண்டி விடுகின்றனர் என சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட பேர் அந்த போஸ்ட்க்கு கீழ் கமெண்ட் போட்டு உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...