மகன் பிரபு பத்தி சலிப்பாக சிவாஜி சொன்ன விஷயம்.. அதையே லிரிக்ஸா மாத்தி ஹிட் கொடுத்த வைரமுத்து..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தால் மறைந்து போனாலும் அவர் நடிப்பால் அசத்திய படைப்புகள், இன்னும் பல நூறாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய வகையில் உருவானதாகும். தான் அறிமுகமமான பராசக்தி படத்தின் மூலமே கவனம் ஈர்த்த சிவாஜி கணேசன், நீதிமன்றத்தில் பேசிய வசனங்கள் மூலமே நடிப்பில் ஒரு புரட்சியை செய்தவர்.

இவரது மகன் தான் சினிமாவில் முன்னணி நடிகரான பிரபு. தந்தையின் பெயரை கெடுக்காத வகையில் இவரும் ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். பல படங்களில் முன்னணி நடிகராகவும் நடித்துள்ள பிரபு, ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

தொண்ணூறுகளில் முன்னணி நடிகராக இருந்த பிரபு, தற்போது அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித் குமார், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபுவை கலாய்த்து கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை பற்றி தற்போது காணலாம். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘டூயட்’. பிரபு மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் சகோதரர்களாக நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இவரது இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து தற்போது வரையில் உள்ள இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாகவும் உள்ளது. அப்படி இருக்கையில், டூயட் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார். பொதுவாக, பிரபு அவர்கள் உடல் சற்று பருமனாக இருக்கும் நிலையில், டூயட் படத்திலும் கூட அவரை கலாய்க்கும் வகையில் சில பாடல் வரிகள் அமைந்திருந்தது.

முன்னதாக, உடல் எடையை குறைப்பதற்காக சிலரின் அறிவுறுத்தல் படி நடிகர் பிரபு ஹார்ஸ் ரைடிங் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சிவாஜி கணேசனை சந்தித்த ஒருவர், மகன் ஹார்ஸ் ரைடிங் செய்ய ஆரம்பித்திருப்பதால் உடல் எடை குறைந்து விட்டதா என கேட்டிருக்கிறார். இதற்கு பதில் சொன்ன சிவாஜி, விளையாட்டாக, “குதிரை தான் இளைச்சு போயிருக்கு” என சொன்னதாக ஒரு செய்தி பரவலாக கூறப்படுகிறது.

இது பற்றி தெரிந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, கத்திரிக்கா கத்திரிக்கா என தொடங்கும் டூயட் பாடல் முழுக்க பிரபுவின் குண்டை நடிகை வர்ணித்து பாடுவது போல வரிகளை எழுதி இருப்பார். அதில், ” குண்டான உடம்பு இழைக்க… குதிரை சவாரி செஞ்சா… குதிரைதான் இழைச்சு போச்சாம்… சொன்னாங்க வீட்டில்” என சிவாஜி வீட்டில் நடந்த சம்பவமே வரிகளாக மாற்றி எழுதியிருப்பார். இந்த தகவல், சினிமா ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.