எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் அவர் ஹீரோவாக நடித்த முதல்படம் தென்மேற்குப் பருவக் காற்று. இயக்குநர் சீனுராமசாமி கூடல்நகர் படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படத்தினை இயக்கினார். இந்தப் படம் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் என்.ஆர். ரகுநந்தன். 2010க்குப் பிறகு வந்த சில கிராமம் சார்ந்த திரைப்படங்களில் இசையின் மூலமாக மண்வாசனையை அறியச் செய்த இசையமைப்பாளர். தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான என்.ஆர்.ரகுநந்தன் தனது முதல் படத்திலேயே தேசிய விருது பாடலைக் கொடுத்திருக்கிறார். ஆனால் தேசிய விருது கிடைத்தது அவருக்கல்ல. கவிஞர் வைரமுத்துவிற்கு.

கவிஞர் வைரமுத்து 2010 காலகட்டங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பெரிய இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே பாடலை எழுதி வந்திருக்கிறார். இந்நிலையில் தென்மேற்குப் பருவக்காற்று இயக்குநர் சீனுராமசாமியும், இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனும் எப்படியாவது வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் உருவாக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர்.

எனவே வைரமுத்துவை அணுகிய போது அவர் தரப்பு முதலில் மறுத்திருக்கிறது. பெரிய படங்களுக்கு மட்டுமே கவிஞர் பாடல்கள் எழுதுகிறார் என்று கூறியிருக்கின்றனர். அதன்பின் அவரை எப்படியாவது சந்தித்து கதையைக் கூறினால் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார் என சீனுராமசாமி நினைக்க அதன்படியே அவரைச் சந்தித்து கதையைக் கூறியிருக்கின்றனர். மேலும் என்.ஆர். ரகுநந்தனும் டியூன் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் டியூன் போட்டுக் கொடுத்து ஒருவாரம் ஆன பின்பும் எந்த பதிலும் வைரமுத்துவிடம் இருந்து வரவில்லை. அதன்பின் ஒருமுறை போன் செய்து நான் படத்தினை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி படத்தைப் போட்டுக் காட்ட அதன்பின் கவிஞர் எழுதிய வரிகள் தான் ஏடி கள்ளச்சி.. எனைத் தெரியலயா.. போடி வெள்ளச்சி எனைப் புரியலையா.. என்ற பாடல்.

எப்படிப்பட்ட வரிகள்.. தமன்னா பத்தி பள்ளி புத்தகத்தில் இருந்த விஷயம்.. ஒண்ணா கைகோர்த்து பெற்றோர்கள் பாத்த வேலை..

என்.ஆர்.ரகுநந்தன் போட்ட டியூனுக்கு வைரமுத்துவின் வரிகள் அப்படியே பொருந்தியிருக்கிறது. உடனே மகிழ்ச்சியான இசையைமப்பாளர் மற்றொரு டியூனையும் போட்டிருக்கிறார் உடனே கவிஞர் வைரமுத்து கள்ளிக் காட்டில் பிறந்த தாயே.. என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே.. என்ற தாய் பாசத்தினை உணர்த்தும் பாடலை எழுதியிருக்கிறார்.

பூரித்துப் போன இசையமைப்பாளர் ரகுநந்தன் இந்தப் பாடலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என வைரமுத்துவிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே இந்தப் பாடலுக்கு வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
John

Recent Posts