வைகுண்ட ஏகாதசி – திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள்

3cec22415a4567bf2540ceac9e71f096

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இது 108 திருப்பதிகளில் 95வது திருப்பதியாகும் எப்போதும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை காணலாம்.

இரணியகசிபு என்ற அரக்கன் தன்னையே கடவுளாக வழிபட வேண்டுமென அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்துக் கொடுமை செய்து வந்தான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் தங்கள் குறைகளைக் கூற நல்லதொரு இடத்தினைத் தேடினார்கள்.

இரணியனை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

இதுதான் திருக்கோட்டியூர் நம்பி பிறந்த ஸ்தலம் கோவில் அருகிலேயே நம்பி வீடு இன்றும் உள்ளது. நம்பியிடம் நாராயண மந்திரத்தை கற்றுக்கொள்ள அடிக்கடி வரும் ராமானுஜரை தவிர்த்து இறுதியாக ஒரு நிபந்தனையுடன் ராமானுஜ மந்திரத்தை சொல்லிக்கொடுக்கிறார் நம்பி. அது என்னவிதமான எச்சரிக்கை என்றால் யாருக்கும் இம்மந்திரத்தை சொல்லிக்கொடுக்க கூடாது என்பதுதான். ஆனால் மந்திரத்தை கேட்ட ராமானுஜர் தான் கேட்டது போல் இவ்வுலக மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தில் ஏறி அனைவருக்கும் சொல்லி விடுகிறார் இதை கேட்ட நம்பி முதலில் ராமானுஜர் மீது கோபம் கொண்டாலும் உலகம் உய்ய அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் நாராயண மந்திரங்களை சொல்லி கொடுத்ததால் அவரின் உயர்ந்த எண்ணத்தை மதிக்கிறார்

திருக்கோஷ்டியூர் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews