வாழ்வில் வளம்தரும் தை வெள்ளி வழிபாடு


ஆடி மாதமும், தை மாதமும் அம்பாளுக்கு உகந்தது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் செய்யவேண்டியது என்னென்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

தை மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல ஒவ்வொரு மாதமும் வரும் எல்லா செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளும் என்பார்கள். எனவே  வெள்ளிக்கிழமை , அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சந்நிதியில் நெய்  தீபமேற்றி வழிபடுங்கள்.

வீட்டிலுள்ள திருஷ்டி, எதிர்மறையான எண்ணங்கள் முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். கூடவே, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதம் வழங்குங்கள். தனம் தானியம் பெருகி நிறைவாய் வாழ்வீர்கள்!

அதனால் தை வெள்ளியை மிஸ் பண்ணிடாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.