உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26


4afd3e981df29cbc95513c3a2faff565

பாடல்..

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.”

பொருள்:

அடியாருக்கு எளியவனான திருமாலே! நீலமணி போன்ற நிறமுடையவனே! மார்கழி நீராடி பாவை நோன்பை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம். அதற்கு எங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாதெனில், உலகத்தையெல்லாம் நடுங்கச்செய்யும் ஒலி உடையதும், பால்வண்ணமும் கொண்ட உன் பாஞ்சசன்னியத்தை போன்ற சங்குகளும், பெரியதான வாத்தியங்களும்(பறை), பல்லாண்டு பாடுபவர்களும், மங்கல தீபங்களும், கொடிகளும், பல்லக்கு,தேர் போன்றவை மேலே கட்டியிருக்கும் பட்டுத்துணிகளும்(விதானம்) ஆகியவையே. ஊழிக்காலத்தில் ஆலிலை மீது பள்ளிக் கொள்பவனே! இவற்றை நீ எங்களுக்கு தந்துருள வேண்டுகிறோம்.

திருப்பாவை பாடலும்,விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.