இந்தியா

இனி தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா பயப்படாதீங்க… டிராய் எடுக்க போகும் புது முடிவு.. உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்..

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஊடுருவி இருக்கிறதோ அதே அளவுக்கு இதில் ஏராளமான ஆபத்தான விஷயங்களும் நிறைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. பலரும் இதனை மிக விழிப்புணர்வாக பயன்படுத்தி வந்தாலும் சிலர் அந்த அளவுக்கு இணையத்தைப் பற்றி தெரியாமல் இருப்பதால் எளிதாக ஏமாந்து போய்விடும் நிகழ்வும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நமக்கு தெரிந்த ஒருவரது பெயரில் புதிதாக அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி நம்மிடம் பணம் கேட்கும் மோசடிக்கு மத்தியில், நாமும் அவர்தான் உதவி கேட்கிறார் என நினைத்து அவர்கள் கேட்கும் பணத்தை அனுப்பி விடுவோம். பின்னர் தான் அது ஒரு போலியான கணக்கு என்பதும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதும் தெரிய வரும்.

இப்படி ஒருபுறம் இருக்க இன்னொரு புறம், செல்போனில் அழைத்தும் ஏதாவது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை பேங்கில் இருந்து பேசுவதாக கூறி கேட்டும் அதன் மூலமும் பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வரும் சம்பவங்களும் சமீப காலங்கள் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இது தொடர்பாக, போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி கூட சிலர் தப்பித்து விடுகின்றனர்.

இது போன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் நிறைய மக்களுக்கு இது பற்றி தெரியாமல் தான் இருந்து வருகிறது. இன்னொரு புறம் வயதான நபர்கள் கூட இதற்கு பலிகடாவாகும் சூழலில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது திகுதிகு என தான் அனைவருக்குமே தோன்றுகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் இந்தியாவில் மிக முக்கியமான ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது ட்ராய் (TRAI). பொதுவாக நமது செல்போனில் இல்லாத நம்பரில் இருந்து அழைப்பு வரும்போது அது குறித்த விவரங்கள் எதுவுமே ஸ்கிரீனில் தோன்றாது. அப்படி ஒரு சூழலில் இனிமேல் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் தொடர்பு கொள்பவர்களின் பெயர் உள்ளிட்ட விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, அழைப்பு வந்ததும் அவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை ஸ்க்ரீனில் காட்டும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நடவடிக்கை தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் நிலையில் மும்பை, ஹரியானா உள்ளிட்ட நகரங்களில் இது தொடர்பாக வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் கூறுகின்றது.

தொடர்ந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு நகரங்களாக இந்த சோதனை முயற்சி அதிகரிக்கப்பட்டு நாடு முழுவதும் மாற உள்ளதுடன் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Published by
Ajith V

Recent Posts