இன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்

இன்று கார்த்திகை முடிந்து மார்கழி மாதம் பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழியாய் இருப்பேன் என பகவான் கிருஷ்ணர் கூறி இருக்கிறார் அந்த அளவு மார்கழி மாதம் ஆன்மிக ரீதியான மாதமாக உள்ளது.

மற்ற நாட்களில் பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 6 மணிக்குள் முடிந்து விடும். மார்கழி மாதம் மட்டும் கொஞ்ச நேரம் நீண்டு 6.30 மணி வரையிலும் இருக்குமாம்.

மார்கழி மாதத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நடப்பதில்லை அது தெய்வத்துக்குரிய மாதமாகவே பார்க்கப்படுகிறது.

எல்லா தெய்வ விழாக்களும் மார்கழியில் தான் வரும், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் மார்கழியில் தான் வருகின்றன.

மார்கழிக்கு அத்துணை சிறப்பு உள்ளது. இன்று பிறந்துள்ளது மார்கழி.

மார்கழி மாதம் ஆண்டாளுக்கு உகந்த மாதம். திருப்பாவை திருவெம்பாவையை மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

எல்லா கோவில்களுமே மார்கழி மாதத்தில் அதிகாலையில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அதிகாலையில் இறைவனை புகழ்ந்து பஜனை பாடி விட்டு அந்த அதிகாலை குளிரில் இறைவனை வணங்கி நம் கோரிக்கைகளை சொல்லி மனதார வழிபட்டு கோவிலில் கொடுக்கப்படும், பொங்கல் சுண்டலை சாப்பிடுவதே தனி சுகம்தான்.

மார்கழி மாதத்தில் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் அதிகாலையில்  எழுந்து இறைவனை வணங்குவது நலம் பயக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.