ஆன்மீகம்
இன்று கந்த சஷ்டி களை கட்டும் திருச்செந்தூர்
முருகனின் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. இந்த விழா முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் நடைபெறுகிறது. முக்கியமாக சூரசம்ஹார விழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த இடமான திருச்செந்தூரில் இவ்விழா மிக சிறப்பாக நடைபெறுகிறது.

பல ஊர்களில் இருந்தும் வந்திருக்கும் பக்தர்கள் கந்த சஷ்டி ஆறு நாளும் விரதமிருந்து முருகனின் அருளை பெற இங்கு வருகின்றனர். காலை கடலில் குளித்து விரதம் மேற்கொள்ளும் இவர்கள் மாலை கடலில் குளித்து முருகனை வழிபட்டு விரதத்தை முடித்து கொள்ளுகின்றனர்.
இன்று ஆணவத்தோடு செயல்பட்ட அசுரனை முருகன் அழித்து தர்மத்தை நிலைநாட்டிய சூரசம்ஹார விழா மாலை 4 மணியளவில் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதை ஒட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.
