பாண்டியாவின் பாச்சா பலிக்குமா? இல்லன்னா சிஎஸ்கே comeback குடுப்பாங்களா?

நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக புதிதாக வந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் தங்களது திறமையை வெளிக்காட்டி மற்ற அணிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

அதுவும் பல நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அணியை கொண்டு சென்றுள்ளார்.

ஏனென்றால் 12 ஆட்டங்கள் ஆடிய குஜராத் அணி 9 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் புதிதாக நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய 12 ஆட்டங்களில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. மேலும் குஜராத் அணி இன்றைய தினம் வெற்றி பெறுமா அல்லது நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்போடு போட்டி காணப்படுகிறது. இந்தப் போட்டியானது இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.