அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோலாகலமான ஆவணி தேரோட்டம்..!

திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில். ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திரு விழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஆவணித்திருவிழா நடைபெறும் 12 நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை இரு நேரங்களிலும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறனர்..

ஆவணி ஏழாம் திருநாளில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சியளித்தார் ஆவணி திருவிழாவான எட்டாம் திருநாளான அன்று சுவாமி சண்முகர் வெண் பட்டுடுத்தி வெள்ளை மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் வெள்ளி சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை அடுத்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை பட்டுடுத்தி, பச்சை வண்ண மலர்கள் கொண்ட அலங்காரம் செய்யப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் எட்டு ரத வீதிகளையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனமும்செய்தனர்

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது முதலில் விநாயகர் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ரதாவீதிகளை சுற்றி வந்தடைந்தது பிறகு சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேரில்எழுந்தருளி ரதவீதிகள் சுற்றி வலம் வந்து காட்சி அளிக்கிறார்.. அடுத்து அம்பாள் தேர் எழுந்தருளி ரத வீதிகள் சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews