ஆளை அசத்தும் சிறந்த சில செல்ஃப் க்ரூமிங் வழிமுறைகள்…!

தன் சீராக்கம் (செல்ஃப் க்ரூமிங்) என்பது அதிக ஒப்பனை செய்து கொள்வதோ, பகட்டான ஆடைகளை அணிந்து கொள்வதோ அல்ல. செல்ப் க்ரூமிங் என்பது தன் சுத்தம் , தூய்மையாக இருத்தல், உடுத்தும் உடை சிகை அலங்காரம் என அனைத்திலும் ஒரு நேர்த்தியை கையாளுதல் உடல் ஆரோக்கியம் என அனைத்தும் சம்பந்தப்பட்ட விஷயம்.

செல்ப் க்ரூமிங் அவசியமா? என்று  கேட்டால் செல்ஃப் க்ரூமிங் இல் அக்கறை செலுத்தும் பொழுது பிறருக்கு நம்மை பார்த்தவுடன் ஏற்படும் மதிப்பை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் நமக்கே நம் மீது தன்னம்பிக்கை அதிகம் ஏற்படும்.

செல்ஃப் க்ரூமிங்காக கவனம் செய்ய வேண்டிய படிநிலைகள்:

ஸ்கின் கேர்: 

cleansing

தினமும் ஏதேனும் ஒரு அடிப்படையான எளிமையான ஒரு சரும பராமரிப்பு பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. இது சருமத்தை ஆரோக்கியமாக காட்டும். சரும நிறத்திற்கும் தோற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சருமம் ஆரோக்கியமாக பொலிவுடன் காணப்பட்டாலே போதும்.

ஒப்பனை:

lipstick

நாம் எந்த இடத்திற்கு செல்கிறோமோ அந்த இடத்தை பொறுத்து நாம் ஒப்பனை செய்து கொள்வது நல்லது. திருமண விழாக்கள் போன்ற பெரிய விழாக்கள் கொண்டாட்டங்கள் தவிர கல்லூரி, அலுவலகம், ஷாப்பிங், திரையரங்கம் இப்படி எங்கு சென்றாலும் குறைந்த அளவிலான அதே சமயம் உங்களை நேர்த்தியாக காட்டக்கூடிய ஒப்பனை இருந்தாலே போதும்.

ஆடை அணிகலன்கள்:

dress

நாம் அணியும் ஆடைகள் முடிந்தவரை நமக்கு கச்சிதமாக பொருந்தும் படி தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவசரகதியில் ஆடையை தேர்ந்தெடுத்து அது எவ்வளவு அழகாய் இருந்தாலும் நமக்கு கச்சிதமாய் பொருந்தாவிட்டாலோ அல்லது நம் அளவைவிட இறுக்கமாய் இருந்தாலோ நமக்கு நம் ஆடை மீது உள்ள குழப்பம் நம்மை தன்னம்பிக்கையுடன் இருக்க விடாது. ஆடை நம்மை கம்ஃபோர்ட்டாக வைத்திருப்பதுடன் தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

அதேபோல் நாம் அணியும் ஆபரணங்களும் அணிகலன்களும் நம்முடைய ஆடைக்கும் நாம் செல்லும் நிகழ்வுக்கும் பொருத்தமானதாய் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தன் சுத்தம்: 

hygiene

தன் சுத்தம் என்பது செல்ப் குரூமிங் இன் மிக மிக முக்கியமான ஒரு பகுதியாகும். குளிப்பது, தன் ஆடைகளை தூய்மையாக வைத்திருப்பது என சகலமும் இதில் அடங்கும். கைகளில் உள்ள நகங்களை நன்கு சீராக வைத்திருத்தல் அவசியம்.  பேசும் பொழுது வாயில் துர்நாற்றம் ஏதும் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வியர்வை அதிகமாக இருக்கும் என்று தோன்றினால்  மென்மையான வாசனை திரவியங்களை பயன்படுத்திக் கொள்ள தவறாதீர்கள். நம்மை பார்க்கும் பொழுதே புத்துணர்ச்சி நிரம்பியவர்களாக நாம் தெரிய வேண்டும்.

உடற்பயிற்சி:

exercise

தினமும் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் இது நம்மை அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் வைத்திருப்பதுடன் நம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

சிகை:

Hair

சிகை அலங்காரத்தை பொருத்தவரை அணிந்துள்ள உடைக்கும் நிகழ்வுக்கும் தகுந்தாற்போல் நாம் சிகை அலங்காரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நம்முடைய முடி கலைந்தது போன்றோ, இல்லை வறண்ட தோற்றத்தையோ தராமல் இருப்பதற்கு உண்டான வழிமுறைகளை நாம் பின்பற்றிக் கொள்ளலாம். நல்ல தரமான ஷாம்பு மற்றும் கண்டீஷ்னர் உபயோகிப்பது அவசியம். நேரம் கிடைக்கும் பொழுது கூந்தலுக்கு எண்ணெய் வைத்து வறண்ட தோற்றம் தராமல் பார்த்துக் கொள்ளவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews