இந்த வாரம் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?.. ஒரு படமாவது வசூலில் தேறுமா?..

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து வெளியான படங்கள் பலவும் பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த வாரம் 6 முதல் 8 படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன.

இந்த மாதம் வெளியான லால் சலாம், லவ்வர், வடக்குப்பட்டி ராமசாமி, சைரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என தெரிந்துக் கொள்ளலாம்.

ரணம்

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் மூலம் மது நாகராஜன் தயாரிப்பில் ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ளது ரணம் படம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, பத்மன், சரஸ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். வைபவ்வின் 25வது படமான ரணம் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி திரையில் வெளியாக உள்ளது.

கிளாஸ்மேட்ஸ்

இப்படத்தை குட்டிப்புலி சரவண சக்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் அங்கையர் கண்ணன், அபி நக்ஷ்த்ரா, சரவண சக்தி போன்ற பலரும் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி படம் கிளாஸ்மேட்ஸ் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் 23ம் தேதி ரீலிஸாக உள்ளது.

பெர்த் மார்க்

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பெர்த் மார்க் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லரக்கல் இப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். ஜெயிலர் படத்தில் மருமகளாக நடித்த மிர்னா மேனன் இவரின் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 23ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஆபரேஷன் லைலா

செல்வம் பொன்னையன் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ஆபரேஷன் லைலா திரைப்படம். இப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸாதிகா ஷர்மா, இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாம்பாட்டம்

வி.சி வடிவுடையான் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் பாம்பாட்டம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படம் சென்ற வாரம் ரிலீஸாக இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த வாரம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் ஜீவன், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்து, இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

பிரம்மயுகம்

மலையாளத்தில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி நடிப்பில் திகில் திரைப்படமாக சென்ற வாரம் வெளியான பிரம்மயுகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கு டப்பிங்குடன் வரும் 23ம் தேதி வெளியிட உள்ளனர்.

சைரன்

அறிமுக இயக்குனரான அந்தோனி பாக்யராஜ் சைரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இந்த வாரம் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews