ஃபேமஸ் ஹீரோயின்தாங்க இந்தக் குட்டிப் பாப்பா… கண்டுபுடிங்க பாக்கலாம்!!

நஸ்ரியா தமிழில் நேரம் என்னும் படத்தின்மூலம் அறிமுகமானவர், முதல் படத்திலேயே இவர் ரொம்பவும் பேமஸ். இவருக்கு சினிமா என்பது குழந்தையில் இருந்தே பழக்கமான ஒரு விஷயமாகும். ஆமாங்க அவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

பளுங்கு, பிராமணி, ஒருநாள் வரும், மாட் டாட் போன்ற படங்களில் இவரது குழந்தை நட்சத்திரக் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.  இவர் நேரம் படத்தின்மூலம் ஹிட் ஆனதைவிட ராஜா ராணியில்தான் செம ஹிட் என்றே சொல்லலாம்.

10d85f8b7f214c0a4758d4d53ef51b51-1

நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும், பெங்களூரு டேஸ் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், ரொம்பவும் ஃபேமசாக இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகி, நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவில் செட்டில் ஆகிவிட்ட இவர், சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுப்பேன் என்று சொன்னதுபோலவே மலையாளத்தில் கூடே மற்றும் டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நஸ்ரியாவின் ரீ எண்ட்ரிக்காக காத்துள்ள நிலையில், தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார். அவர் போட்டோவைப் பதிவிட்டதும் போதும் ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகின்றனர். மேலும் தமிழில் ரீ எண்ட்ரி எப்போ? என்றும் கேட்டும் வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.