நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணம் இதுதான்… பகீர் கிளப்பிய அகோரி..

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக சென்னை வந்து ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சுமார் 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் பணியாற்றியவர்.

அதன்பின்பு குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும், சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் நடித்த கதாபாத்திரத்தால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

யம்மா… ஏய்.. என்று இவர் பேசிய வசனம் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து பலர் இதை வைத்து ரீல்ஸ் எடுத்தனர். நடிகர் மாரிமுத்து சின்னத்திரையில் முதன்முதலாக நடித்த தொடர் தான் எதிர்நீச்சல். முதல் தொடரே அவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. இந்த தொடருக்காக டப்பிங் செய்து கொண்டிருக்கும் போதுதான் கடந்த ஆண்டு திடீரென்று  மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் கடைசி நிமிட வீடியோ கூட வைரலானது.

தற்போது யூ-டியூப்பில் அகோரி கலையரசன் என்பவர் நடிகர் மாரிமுத்துவின் மரணம் இயற்கையானது அல்ல என்று கூறியுள்ளார். பல்வேறு டாக்டர் பட்டங்களை பெற்ற, நாட்டுப்புற கலைஞரான கலையரசன்,கோவையில் கிராமிய புதல்வன் அகாடமி ஒன்றை நடத்தி வந்தார். கண்ணாடி துகள்கள் மீது கரகாட்டம் ஆடுவது போன்ற பல சாதனை முயற்சிகளை மேற்கொண்டவர், இப்போது தான் அகோரியாக மாறிவிட்டதாக கூறி சமூக வலைதளத்தில் நேர்காணல் கொடுத்து வருகிறார்.

அதில் ஒரு நேர்காணலில், நடிகர் மாரிமுத்து இறப்பு பற்றி கூறுகையில், கடைசியாக மாரிமுத்து அவர்கள் நடித்த நாடகம் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் என்ற நாடகம் ஆகும். அந்த நாடகத்தில் பெண்களை தாக்கி பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல வீடுகளில் ஓடும் இந்த நாடகத்தை பார்க்கும் பெண்கள் அவரை திட்டி சாபம் விட்டிருப்பார்கள். அந்த அபசகுண வார்த்தைகளால் தான் அவருக்கு மரணம் நேரிட்டது என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews