தமிழகம்

ஜெய்பீம் ஷூட்டிங் அப்போ நடந்த இந்த சம்பவம் என் கண்ணை திறந்துடுச்சு… மணிகண்டன் பகிர்வு…

மணிகண்டன் சினிமாவின் திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலமானவர்களில் மணிகண்டனும் ஒருவர். விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கலக்க போவது யாரு’ ஷோவில் கலந்துக் கொண்டு இரண்டாம் இடத்தை வென்றவர்.

பின்னர் ரேடியோ ஜாக்கியாக சில காலம் பணிபுரிந்தார். அதே நேரத்தில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு டப்பிங் செய்தார். 2013 ஆம் ஆண்டு ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மணிகண்டன்.

2015 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்மணிகண்டன். தொடர்ந்து ‘8 தோட்டாக்கள்’, ‘விக்ரம் வேதா’, ‘காலா’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ போன்ற திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

2021 ஆம் ஆண்டு ‘ஜெய்பீம்’ படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானார் மணிகண்டன். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. தொடர்ந்து ‘குட் நைட்’, ‘லவர்’ ஆகிய படங்களில் நடித்து மக்களின் எதார்த்த நாயகன் என்ற வரவேற்பைப் பெற்றார்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் மணிகண்டனிடம் ஜெய்பீம் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு பதிலளித்த மணிகண்டன், ஜெய்பீம் ஷூட்டிங் அப்போ மறக்கமுடியாத சம்பவம் நடந்தது. இருளர் சமுதாயம் இருக்கிற இடத்தில ஷூட்டிங் நடந்துச்சு. அங்க இருக்கிற பசங்க கிட்ட ஏன் படிக்க பள்ளிக்கூடத்துக்கு போகலனு கேட்டேன்.

அதற்கு ஒரு பையன், நாங்க பள்ளிக்கூடம் போனா எங்க கிட்ட யாரும் உட்கார மாட்டாங்க, எங்க கிட்ட உட்காந்தா எலி நாத்தம் அடிக்கும்னு சொல்லி அசிங்கப்படுத்துவாங்க. இப்படி அசிங்கப்பட்டு படிச்சு முன்னேறி என்ன பண்ண போறோம், அதான் பள்ளிக்கூடம் போகலனு சொன்னான். அதுவரைக்கும் எதார்த்தம் புரியாம வெறுமனே படிச்சா முன்னேறிரலாம் நெனச்ச என் கண்ணை திறந்து வச்சது அந்த சம்பவம் என்று கூறியுள்ளார் மணிகண்டன்.

Published by
Meena

Recent Posts