பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பது இந்த பிரபலம் தான்…

பா. ரஞ்சித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது இரண்டாம் படமான ‘மெட்ராஸ் ‘ படத்தின் மூலம் மக்களிடம் ஒருமனதாக நேர்மறை விமர்சனங்களை பெற்று அப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அதன் பின்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 2016 ஆம் ஆண்டு ‘கபாலி ‘ மற்றும் 2018 ஆம் ஆண்டு ‘காலா’ ஆகிய படங்களை இயக்கியவர்.அதற்கு அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றே சொல்லாம். இவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் உணர்ச்சிபூர்வமான ஒன்றாகும். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித்தின் திரைப்படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும், அவர்களின் கோபத்தையும், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தின் தேவைகளை பதிவு செய்ய தவறியதில்லை. அந்த வரிசையில் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிகரும் இசையமைப்பாளரான ஜி. வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், ஷ்வாந் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரூபேஷ் ஷாஜியும், செல்வா ஆர். கேவும் மேற்கொள்ள இருக்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...