திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24


fd24d1969553df5a1ae0dd69cfb07735

பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

பொருள்

ஒருபக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள், இன்னொரு பக்கம், ரிக் வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள், ஒருபக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள், இன்னொரு பக்கம், தொழுபவர்களும், பக்திமிகுதியால் அழுபவர்களும்,  அழுது துவண்ட கைகளை உடையவர்கள், இன்னொருபக்கம், சிரத்தின்மேல் கைகூப்பி வணக்கம் செய்பவர்கள் என கலந்துக்கட்டி வழிபடும்
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 
இவர்களோடு என்னையும் ஆட்கொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.