பொழுதுபோக்கு

என் தோற்றத்தைப் பார்த்து இந்த மாதிரிலாம் நினைச்சாங்க… சென்றாயன் எமோஷனல்…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தவர் நடிகர் சென்றாயன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தவர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றிய சென்றாயன் நகைச்சுவை மற்றும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பவர்.

2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் முக்கியமான பைக் திருடும் காட்சியில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் சென்றாயன்.

தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘சிலம்பாட்டம்’, ‘ரௌத்திரம்’, ‘மூடர்கூடம்’ ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மூடர் கூடம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதினை வென்றார் சென்றாயன்.

‘ரம்மி’, ‘பா. பாண்டி’, ‘நிமிர்’, ‘அசுரன்’, ‘சுல்தான்’, ‘பத்து தல’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்கள் சென்றாயன் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். இது தவிர விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டு 84 நாட்கள் விளையாடி தனது வெள்ளந்தியான குணத்தின் மூலம் ரசிகர்களை பெற்று பிரபலமானவர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட சென்றாயன் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், என் தோற்றத்தை வைத்து நிறைய இடத்தில அவமானங்களை சந்தித்திருக்கிறேன். ஒரு நாள் நைட் ரோட்ல நடந்து போன போது என்னை திருடன் அப்படினு நெனச்சிட்டு போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்க, பின்னர் பொல்லாதவன் படத்தில நடிச்சது தெரிஞ்சு அனுப்பினாங்க என்று எமோஷனலாக பேசியுள்ளார் சென்றாயன்.

Published by
Meena

Recent Posts