பொழுதுபோக்கு

பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு பதிலாக இவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க… விக்ரமன் பகிர்வு…

விக்ரமன் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் படங்களை இயக்குவதில் வல்லவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு முதலில் பார்த்திபன் அவர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1990 ஆம் ஆண்டு ‘புது வசந்தம்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவருக்கு உதவி இயக்குனராக கே. எஸ். ரவிக்குமார் அவர்கள் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தை விக்ரமன் இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று விக்ரமன் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. 1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானியை வைத்து ‘சூரியவம்சம்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது.

2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் அவர்களை வைத்து ‘வனத்தைப்போல’ படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி நடிகர் விஜயகாந்திற்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. இதற்காக சிறந்த இயக்குனருக்கான மாநில தமிழ்நாடு திரைப்பட விருதை வென்றார்.

‘பூவே உனக்காக’ திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை விக்ரமன் அவர்கள் பகிர்ந்துள்ளர். காதல் திரைப்படமான இதில் விஜய் மற்றும் சங்கீதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் முரளி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். விஜய் அவர்களுக்கு பெரிய வெற்றித் திரைப்படமாக இது அமைந்தது.

இப்படத்தைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட விக்ரமன், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக கார்த்திக் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னார்கள். ஆனால் நான் இந்த படத்திற்கு விஜய் தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறினேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் விக்ரமன்.

Published by
Meena

Recent Posts