அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் ஆகவிருக்கும் விஜய் சேதுபதியின் இந்த இரண்டு படங்கள்…

குறுகிய காலத்தில் தனது பன்முக திறமையால் விடாமுயற்சியால் வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பீட்சா(2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் (2012), இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா(2013), நானும் ரவுடி தான் (2015), சேதுபதி (2016), கருப்பன் (2018) 96 (2018) போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது விஜய் சேதுபதி கேரியரில் முக்கியமான படங்களான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாலாஜி தரிணீதரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்’. இப்படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நாயகியாக காயதிரி நடித்துள்ளார் மற்றும் விக்னேஸ்வரன், பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு நகைச்சுவையாக எடுத்த திரைப்படம் இது. கதாநாயகனுக்கு ஏற்படும் தற்காலிக மறதியை அவரது நண்பர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் காட்டியிருப்பார்கள்.

அடுத்து கோகுல் எழுதி இயக்கி 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. விஜய் சேதுபதி, அஸ்வின், நந்திதா, சுவேதா, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மக்களால் ரசிக்கப்பட்டது. நல்ல விமர்சங்களை பெற்று இத்திரைப்படம் வெற்றிப் பெற்றது மற்றும் இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டானது.

ஆகவே இந்த இரண்டு திரைப்படத்தையும் ரீ- ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...