பாதாம் பருப்பில் உள்ள நன்மைகள் இவைகள்தான்!!

b4eb5e3f23495d8a145b8d97a783028a

பாதாம் பருப்பானது கொலஸ்டிராலை அதிகரிக்கும் என்று கருதி பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் பாதாம் பருப்பானது அதிக அளவில் நன்மைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. அத்தகைய பாதாம் பருப்பில் உள்ள நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பாதாம்பருப்பானது கொலஸ்டிராலை அதிகரிக்கும் என்று கருதுவது பொய்யான விஷயமாகும், இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைத்து, நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதாக உள்ளது. மேலும் தினமும் ஒரு பாதாம் பருப்பினை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு பாதாம் பருப்பினை 3 என்ற அளவில் கொடுத்துவந்தால் நினைவாற்றல் நிச்சயம் அதிகரிக்கும், மேலும் இது இதய நோயைக் கட்டுக்குள் வைப்பதாகவும் உள்ளது. மேலும் இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் எனப் பலரும் இது கொழுப்பினை அதிகரித்து பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எண்ணி சாப்பிடத் தயங்குவதுண்டு.

ஆனால் இது எந்தவிதமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டுள்ளது, இதனால் அவர்கள் தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் பாதாம்பருப்பினை நீரில் ஊறவைத்த் பருப்பினை 4 முதல் 5 என்ற அளவில் எடுத்துக் கொண்டால் பசி உணர்வு ஏற்படாது. இதனால் அவர்கள் எளிதில் உடல் எடையினைக் குறைக்க இயலும்.

 மேலும் தலைமுடி உதிர்வுப் பிரச்சினைகள் இதனை எடுத்துக் கொண்டால் நிச்சயம் பிரச்சினை முடிவுக்கு வரும். 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.