வெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தை

9892af3284e0422308ad3b1b6b10dcdd-2

இங்கு இருப்பது போல் வெளிநாட்டில் சங்கல்பங்கள் செய்வது கடினமான விசயம்தான். இருந்தாலும் தற்போதுள்ள நாகரீக காலத்தில் இராமேஸ்வரம். காவிரிக்கரை யில் உள்ள புரொகிதர்களுடன் பேசி வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸப்பிலேயே திதி தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கின்றனர். இங்கு இருக்கும் பிராமணர் வீடியோ கால் பார்த்து மந்திரம் சொல்ல சொல்ல சம்பந்தப்பட்டவரும் சொல்கிறார்.

சிலர் வெளிநாட்டிலேயே தனக்கு தெரிந்த புரோகிதரை அழைத்த் பூஜை செய்கிறார். ஸங்கல்பம் செய்யும்போது தற்போது இருக்கும் இடத்தை சொல்ல வேண்டும் ஒவ்வொன்று நாட்டுக்கும் சமஸ்க்ர்த ரீதியாக சில பெயர்கள் உண்டு இந்தியாவில் இருப்பவர்கள் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத வர்ஷே என கூறுவார்கள் கீழ்க்கண்ட நாடுகளில் இருப்பவர்கள் சங்கல்ப பூஜைகள் செய்யும்போது எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டுக்கு உள்ள சமஸ்க்ருத ரீதியான கீழ்க்கண்ட வார்த்தைகளை உபயோகிக்கலாம்.

01. இந்தியா — *பாரத வர்ஷம்*.,

02. அட்லாண்டிக் பெருங்கடல் — *கேதுமாலா வர்ஷம்*.,

03. ஐரோப்பா — *ஹரி வர்ஷம்*.,

04. வடதுருவம் — *இலாவ்ருத வர்ஷம்*.,

05. தென் அமெரிக்கா — *குரு வர்ஷம்*.,

06. வட அமெரிக்கா — *ஹிரண்யக வர்ஷம்*.,

07. Green Land — *ரம்யக வர்ஷம்*.,

08. ஆசியா — *கிம்புருஷ வர்ஷம்*.,

09. பஸிபிக் சமுத்திரம் — *பத்ராஸ்வ வர்ஷம்*.

அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.