ஐபிஎல் வரலாறே ஆர்சிபி கப் அடிக்கக்கூடாதுன்னனு நினைக்குது போல!!

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு கொண்டுவரப்பட்ட ஒரு விளையாட்டு தொடர தான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.

தற்போது பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் குஜராத் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி லக்னோ அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவிப் அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கப் அடிக்கும் என்று பலரும் பேசிக் கொண்டு வருகின்றனர்.

ஏனென்றால் அவர்களின் batting தரவரிசை அனைத்து அணிகளுக்கும்  பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு எண்ணிய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பெரும் சோகம் அளிக்கும் வரலாறு ஐபிஎல்லில் நடந்து வருவதாக தெரிகிறது.

அதன்படி ஐபிஎல் வரலாற்றிலேயே நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. தற்போதைய சீசனில் நான்காவது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பெங்களூர் அணி இந்த வரலாற்றை முறியடிக்குமா? இல்ல தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.