தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

நடிகர் தளபதி விஜய் இந்திய திரை உலகின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்று வெற்றி நாயகனாக வலம் வருகிறார். லியோ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்பொழுது தனது 68வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் 550 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் 100 முதல் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு இணையாக அரசியலிலும் கால் பதிக்கும் தளபதி விஜய் இன்றைய சமூகத்தினர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பது உண்மையாகும் பட்சத்தில், தளபதி விஜய்யின் வெற்றிக்குப் பின் அவரின் காதல் மனைவி சங்கீதா இருப்பது உண்மைதான். விஜயின் மனைவி சங்கீதாவும் மிகப்பெரிய தளபதி ரசிகைகளில் ஒருவர் தான். நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, சந்திரலேகா, விஷ்ணு,ரசிகன் போன்ற திரைப்படங்களில் தளபதி விஜயின் நடிப்பை பார்த்து விஜயின் ரசிகையாக சங்கீதா மாறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக. லண்டனில் இந்த திரைப்படத்தை பார்த்த சங்கீதா விஜயை பார்த்தே ஆக வேண்டும் என்று நினைத்து தனது அக்காவை அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளார். ஸ்ரீலங்காவை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதா தனது தந்தையின் பிசினஸ் காரணமாக லண்டனில் படித்து வந்துள்ளார். சென்னைக்கு வந்த சங்கீதா பலமுறை தளபதி விஜய் நேரில் சந்திக்க முயன்று ஒரு படப்பிடிப்பின் போது நேரில் சந்தித்து பேசி உள்ளார். அடுத்த முறை இவர்களின் சந்திப்பு விஜய் குடும்பத்துடன் நடந்துள்ளது.

விஜய்யின் அப்பா, அம்மாவிற்கு ரசிகையாக இருந்த சங்கீதாவை முதல் சந்திப்பிலேயே பிடித்துள்ளது. சங்கீதாவின் அழகு, அமைதியான பேச்சு, பொறுப்பான குணத்தை பார்த்து விஜயின் அப்பா, அம்மா விஜய்யிடம் சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு விஜய் தங்கள் விருப்பம் என சம்மதம் தெரிவிக்க விஜய் மற்றும் அவரின் அப்பா அம்மா மூவரும் இணைந்து லண்டனுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சங்கீதாவின் அப்பா, அம்மாவை நேரில் சந்தித்து, அவர்களின் சம்மதத்துடன் தளபதி விஜய்க்கும் சங்கீதா அவர்களுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதை தொடர்ந்து சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் எனும் ஒரு மகனும் திவ்யா என ஒரு மகளும் உள்ளார்.

தளபதியின் ரசிகையாக இருந்து மனைவியாக மாறிய சங்கீதாவிற்கு தளபதி விஜய் திருமணத்திற்கு முன்னதாக வைர மோதிரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார், அதேபோல் சங்கீதாவும் விஜய்யின் பிறந்தநாள் என சிறப்பான நாட்களில் பரிசளிக்க தவறியதில்லை என்பதை தளபதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் குறை, நிறைகளை சங்கீதா வெளிப்படையாக கூறி விடுவதாகவும், இந்த படம் நீண்ட நாள் திரையில் வெற்றி பெறும் அல்லது சில தோல்விகளை தழுவ வாய்ப்புள்ளது என சரியான விமர்சனத்தை சங்கீதா கூறுவதாக விஜய் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

தலைவர் 171வது படத்தை இயக்க சக இயக்குனர்களின் உதவியை நாடும் லோகேஷ் கனகராஜ்!

மேலும் தளபதி விஜய் சினிமா, அரசியல் என ஒரு பக்கம் பிசியாக இருக்க அவர் மகன் சஞ்சய் தற்பொழுது தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். அந்த வகையில் தளபதி விஜயின் மனைவி சங்கீதா லண்டனில் சொந்தமாக பல பிசினஸ்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இளம் வயதிலிருந்து ஹீரோவாக நடித்து வரும் தளபதி விஜய்யும் தன் மனைவி சங்கீதா மீது பல கோடி சொத்து மதிப்புகளை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி விஜய் மனைவி சங்கீதா அவர்களுக்கு 400 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.