புஸ்ஸி ஆனந்துக்கு என்னாச்சு..! மருத்துவமனைக்கு அவசரமாக புறப்பட்டு வந்த தளபதி விஜய்

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளரும், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாவே லியோ வெற்றி விழா, மக்கள் இயக்கப் பணி என்று பிஸியாக இருந்த புஸ்ஸி ஆனந்துக்கு பணிச்சுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடும் காய்ச்சலில் அவதிப்பட சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவில் ஓடிவந்த தளபதி விஜய்

புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தளபதி விஜய் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரிடம் நம்விசாரித்தார். பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் தளபதி 68 படத்திற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காங்க் புறப்பட்டுச் சென்றார்.

யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?

புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் தீவிர விஜய் ரசிகராக இருந்துள்ளார். பின்னர் படிப்படியாக புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத் தலைவராக உயர்ந்தார். அரசியலிலும் ஈடுபட்டு வந்த ஆனந்த் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2006-ல் வெற்றி வாகை சூடினார். அன்று முதல் இவரது பெயர் புஸ்ஸி ஆனந்த் என்று ஆயிற்று.

விஜய்யுடன் நெருக்கம்

எம்.எல்.ஏ வாக இருந்த போதிலும் விஜய் ரசிகர் மன்ற தலைவர் பணியைத் திறம்பட நிர்வகித்து வந்தார். இதனால் நடிகர் விஜய்க்கு மிக நெருக்கமாக நபர்களில் புஸ்ஸி ஆனந்த் உருவெடுத்தார். விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு புஸ்ஸி ஆனந்தும் முக்கிய பங்கு வகித்தார். மேலும் தற்போது விஜய் அரசியலில் எப்போது இறங்குவார் என்ற கேள்விகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பல தருணங்களில் பட்டும்படாமலும் பதில் தந்து விட்டுப் போவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விஜய் மக்கள் இயக்கத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புஸ்ஸி ஆனந்த் லியோ வெற்றி விழாவிற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகைளை தயார்படுத்துவதிலும், மேலும் நலத்திட்ட உதவிகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவதுமாக இருந்தால் ஓய்வு இல்லாமல் மிகுந்த பணிச்சுமைக்கு ஆளானார். திடீரென இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews