சங்கீதாவைப் பார்த்தவுடன் ஓ.கே.சொல்லிய தளபதி விஜய்.. இப்படித்தான் இவங்க திருமணம் நடந்துச்சா..!

தளபதி விஜய்க்கு ஆண் ரசிகர்களும், பெண் ரசிகர்களும் சரிக்குச் சரி சமமான அளவில் இருக்கின்றனர். பூவே உனக்காக படத்திற்குப் பின் அப்போதுள்ள பெண்கள் பலர் விஜய்க்கு ரசிகைகளாக மாறினர். அதற்கடுத்து சில வருடங்களுக்குப் பிறகு வந்த காதலுக்கு மரியாதை படத்தில் இன்னும் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகமானது. இப்படி தனது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்திலேயே அதிக பெண் ரசிகைகளை கொண்டிருந்தார் தளபதி விஜய். இன்றளவும் அந்த அன்பு ரசிகைகளிடம் குறையவில்லை.

இப்படி ரசிகையாக வந்து அவரைக் கரம் பிடித்தவர் தான் அவரின் மனைவி சங்கீதா. அப்போது விஜய்க்கு லவ் டுடே படம் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். உலகின் பல நாடுகளிலிருந்தும் விஜய்யின் ரசிகர்கள் அவரைச் சந்திக்க வருவது வழக்கம். விஜய்யும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் புகைப்படம், ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து வழியனுப்பி வைப்பார். இப்படி ஒருநாள் லண்டனில் படித்துக் கொண்டிருந்த சங்கீதா தனது உறவினருடன் லவ்டுடே ஷூட்டிங்-ல் இருந்த விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.

வழக்கம் போல் விஜய்யும் தனது ரசிகர்களுக்கு செய்வது போன்று புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் அன்று எடுத்த அந்த புகைப்படமும், ஆட்டோகிராப்-ம் பின்னர் திருமண ஆல்பமாகவும், சங்கீதா விஜய் என்றாகும் என இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. சங்கீதாவின் உறவினர் விஜய்யின் பெற்றோர்களுக்குத் தெரிந்தவர் என்பதால் அவர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது சங்கீதாவும் உடன் செல்ல அங்கு சந்திரசேகருக்கும், ஷோபாவிற்கும் சங்கீதாவைப் பிடித்துப்போக முறைப்படி பெண் கேட்டுள்ளனர்.

உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?

சங்கீதாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் தளபதி விஜய்யின் சம்மதத்திற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் அவரிடம் சங்கீதா பற்றி கேட்டுள்ளார். விஜய் சங்கீதாவினை ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்ததால் அவரின் குணநலன்கள் அவருக்குத் தெரியும். எனவே எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உங்களது விருப்பம் அப்பா என்று பெற்றோரின் முடிவுக்கு கட்டுப்பட்டவராய் சம்மதம் தெரிவிக்க, மீண்டும் லண்டன் சென்றுள்ளனர். அங்கு திருமணம் குறித்த பேச்சுவார்த்தை இனிதே நடைபெற்று நிச்சயமும் முடிந்துள்ளது.

அதன்பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு 1999-ல் சங்கீதாவை மணம் முடித்தார் விஜய். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...