லியோ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு இவ்வளவு கிடுக்குப்பிடியா? உச்சகட்ட டென்ஷனில் லியோ டீம்

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மீண்டும் உருவான லியோ திரைப்படம் உலகெங்கிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 1000 கோடியை தொடுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தினமும் அப்டேட்ஸ்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய்-ன் நடிப்பை ரசிகர்கள் அல்லாதவரும் கொண்டாடி வரும் வேளையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடத்தை விமரிசையாக நடத்த தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பான் இந்தியா படம் என்பதால் அண்டை மாநிலங்களில் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி கடைசியில் ஆடியோ வெளியீட்டு விழாவே நடக்காமல் போனது.

Vijay

இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தின் வெற்றி விழாவை நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரிய நிலையில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெற்றி விழா நடத்த திட்டமிட்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏனென்றால் அண்மையில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினை முதல்வர் வரை சென்றது. இதனால் காவல்துறைக்கு இந்தமாதிரியான நிகழ்ச்சிகளில் அனுமதி வழங்குவது பற்றி மிகுந்த யோசனையில் உள்ளது. எனினும் லியோ வெற்றி விழா நடத்த காவல் துறையானது பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

அதில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரம், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, காவல்துறை அல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, கலந்து கொள்ளப் போகும் பிரபலங்களின் பட்டியல் போன்றவை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு காவல்துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளது. மேலும்  5000 மக்களுக்கு மேல் கூட அனுமதியில்லை எனவும் விதிமுறை கூறப்பட்டள்ளது.

மேற்கண்ட கேள்விகளுக்கு லியோ தயாரிப்பு நிறுவனம் தகுந்த பதில்களை கூறுமாயின் வெற்றி விழா நடத்துவதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டும் ஏண்டா இந்த சோதனை என்பது போல் வெற்றி விழாவை நடத்தலாமா வேண்டாமா என்று லியோ டீம் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews