தாறுமாறா இருக்காரே தளபதி!.. யங் நடிகர்கள் எல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா.. விஜய்யின் செம செல்ஃபி!

தி கிரேட் ஆப் ஆல் டைம் படத்தில் தந்தை மற்றும் மகன் என இரு வேறு கதாபாத்திரங்களை நடிகர் விஜய் நடித்து வரும் நிலையில் கிளீன் ஷேவ் செய்து கொண்டு மீசை கூட இல்லாமல் இளமையான தோற்றத்தில் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த வருகிறார். கடந்த சில நாட்களாகவே சென்னையில் நடைபெற்ற வரும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று எப்படியாவது விஜய்யை சந்தித்து விட வேண்டும் என ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் அவர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி மற்றும் ரசிகர்களுக்கு கை அசைத்து முத்தம் கொடுத்து சந்தோஷப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது x தளத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் செல்ஃபி:

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை மற்றும் கஸ்டடி உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்து நிலையில், மாநாடு படத்தில் வெங்கட் பிரபுவின் உழைப்பை பார்த்து அசந்து போன விஜய் அதே நம்பிக்கையுடன் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என தளபதி விஜய் படத்துக்கு தாறுமாறான டைட்டிலை வைத்துள்ள வெங்கட் பிரபு படத்தையும் பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, நடிகை மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

20 வருஷம் குறைஞ்சிடுச்சே:

வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விடும் என்றும் முதலில் மகன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டு சிஜி பணிகளுக்கு அந்த காட்சிகளை கொடுத்து விட்டு அதன் பின்னர் அப்பா விஜய்க்கான போர்ஷன்களை வெங்கட் பிரபு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் இந்த படத்துக்காக திடீரென பல கிலோ எடையை எல்லாம் குறைத்து விட்டு தனது ரசிகர்களுக்காக செம ரிஸ்க் எடுத்து வித்தியாசமான தோற்றத்தில் வித்தியாசமான கதையில் நடித்து வருகிறார்.

விஜய்யை பார்த்த ரசிகர்கள் அவர்தான் விஜய் என அடையாளம் காணவே கஷ்டப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என டோட்டலாகவே தன்னை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டு வெங்கட் பிரபுவின் விஷனில் முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார் விஜய்.

லியோ வெற்றி விழாவில் பார்த்த வயதான விஜய்யா இது என ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே ஷாக் ஆகி விட்டது. ஆனால், இந்த லுக்கை எல்லாம் சீக்ரெட்டாக வைத்து படம் வெளியாகும் போது ரிவீல் செய்திருந்தால் பெரிய ஹைப் கிடைத்திருக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.