தளபதி 68 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் லியோ திரைப்படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தாய்லாந்தில் இருந்து திரும்பிய படக்குழு இரண்டு நாள் இடைவெளியை தொடர்ந்து தற்பொழுது சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் தளபதி 68 இன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் பிரசாந்த்,பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர்,யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி,அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் என அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். படத்தில் ஒரு பாடல் காட்சிகள் முன்னதாக படமாக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யின் ஓப்பன் சாங் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படம் டைம் ட்ராவல் மையமாக வைத்தும் சயின்ஸ் பிக்சன், குளோனிங் போன்ற அறிவியல் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாகி வருவதாகவும் இந்த திரைப்படம் தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஆறு மிகப்பெரிய பிரமாண்ட சண்டை காட்சிகள் இருப்பதாகவும், இந்த ஆறு சண்டை காட்சிகளும் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி விஜய், மகன் கதாபாத்திரத்தில் மிக இளமையாக தோன்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யின் முகம், பாவனைகள், உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு அதற்கான தொழில் நுட்ப வேலைகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த திரைப்படம் ஆன தளபதி 68 படத்தின் அப்டேட்டுகளை ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக டிசம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அதாவது புத்தாண்டு அன்று வெளியிடப்பட குழு முடிவு செய்துள்ளது. இந்த வருடம் புத்தாண்டு தளபதி ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதத்தில் அப்டேட்டுகளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்?

அதைத் தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வரும் விசேஷ நாட்களில் தளபதி படத்தின் அப்டேட்டுகள் வெளியாவதால் அது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50 ஆவது படமாக வெளியான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்ததைப் போல தளபதியின் 68 திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும் என சினிமா வட்டாரங்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில், டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.