தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் குறித்த சூப்பர் அப்டேட்!

ஹோலிவுட் மாஸ் ஹீரோ தளபதி விஜய் தற்பொழுது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் தொடங்கியது, அதேபோல் சென்னையில் நடந்த பூஜை நிகழ்ச்சி தளபதி 68 பாலகுருவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக துவங்கினர். சென்னையில் தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற தளபதி 68 படப்பிடிப்பில் விஜய் நடித்த ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் சென்னையில் நடந்த தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது துருக்கிக்கு சென்றுள்ளது படக்குழு. துருக்கியின் இஸ்தான்பில் நகரில் நடைபெற உள்ள தளபதி 68 படப்பிடிப்புக்காக விஜய் உட்பட மேலும் சில நடிகர்களும் சென்றுள்ளனர். துருக்கியில் மொத்தம் 25 நாட்கள் வரை படப்பிடிப்பை நடத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. அதன் தொடர்ச்சியாக தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் தொடரும் என செல்லப்பட்டது. ஆனால் சென்னைக்கு பதிலாக ஹைதராபாத்தில் படமாக்கப்பட முடிவு செய்துள்ளதாம்.

துருக்கி ஷெட்டுல்களுக்கு பிறகு ஸ்டுடியோவில் மட்டுமே தளபதி 68 படம் பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. இதனால் விஜய் துருக்கியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதே நேரம் புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தளபதி 68 டைட்டில், விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.

தலைவர் 171 படத்தில் வில்லனாக களம் இறங்க காத்திருக்கும் 5 ஹீரோக்கள்!

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், நடன புயல் பிரபுதேவா, ஜெயராம், சினேகா, கைலா, மீனாட்சி சவுத்ரி , யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடத்தி வருகின்றனர், இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி ரஜினி இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் படத்தில் மொத்தம் ஐந்து பாடல் காட்சிகள் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.